பூ ஒன்றை கண்டேன் | MR Tamil Novels| Tamil audio novels | tamil novels audiobooks | RJ சுஜி ஷண்முகம்
VISHNU TAMIL NOVELS AUDIO BOOKS и ещё 2
0:00 / 0:00
பூ ஒன்றை கண்டேன் | MR Tamil Novels| Tamil audio novels | tamil novels audiobooks | RJ சுஜி ஷண்முகம்
23 452 просмотра · 2 месяца назад
VISHNU TAMIL NOVELS AUDIO BOOKS и ещё 2
23 452 просмотра · 2 месяца назад
• பூ ஒன்றை கண்டேன் | MR Tamil Novels| Tamil ...
நீலக் கடலின் பிண்ணனியில்... கரையோரப் படகுகளின் அணிவகுப்பின் அருகே..
ஒன்றாக பிணைந்து நிற்பவர்களை.. சிறு புள்ளியாக காண்பித்து படம் முடிய..
அனைவரும்.. கலைய மனமில்லாமல் இருக்கைகளை விட்டு எழுந்து கொள்கின்றனர் அரங்கில் பளீரிடும் விளக்கின் ஒளியால் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே விரைய.. சரயூ மட்டும் எழுந்து கொள்ள மனமில்லாமல் அப்படியே கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்..
'சரயூ.. ஏய் சரயூ... "
அவளருகில் அமர்ந்திருந்த அபர்ணா அவளின் தோளைப் பற்றி உலுக்கினாள்... கனவிலிருந்து விழிப்பவள் போல்.. விழித்த சரயூ.. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவசரமாய் எழுந்தாள்.
'என்னடி.. விழித்துக் கொண்டே தூங்குகிறாயா..? இதற்குத்தான்.. இந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும்ன்னு என்னை ஒருவாரமாய் நச்சரித்து கூப்பிட்டுக் கொண்டு வந்தாயா..?"
'விழித்துக் கொண்டே தூங்கிறேனா..? அதுவும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதா..? போடி... நீ வேற... நான் அப்படியே பிரமிச்சுப் போய் உட்கார்ந்து விட்டேனாக்கும்.."
'என்னவோ போ.. நீதான் இந்தப் படத்தை மெச்சிக்கனும்.. ஒரு காமெடி உண்டா... குத்துப் பாட்டு உண்டா... ம்ஹும்.. நீதான் கண்ணை கொட்டக் கொட்ட விழித்துக்கிட்டு படம் பார்த்தே.. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை..."
'நான் மட்டும் ரசித்துப் பார்க்கவில்லை அபர்ணா.. இந்தத் தியேட்டரில் இருந்த எல்லோரும் அப்படித்தான் பார்ததார்கள்.. அதையும்.. நீ பார்த்திருப்பாயே..."
'பார்த்தேன்.. பார்த்தேன்.. இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குன்னு எல்லோரும் இப்படி உருகி வழியறீங்களோ தெரியவில்லை.."
அவர்கள் பேசிக் கொண்டே... தியேட்டர் வாசலுக்கு வந்தார்கள்..
'இருடி... நான் வண்டியை எடுத்துக் கொண்டு வருகிறேன்..."
அபர்ணா.. இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் போய்விட.. சரயூ.. தியேட்டரின் முகப்பிலிருந்த திரைப் படத்தின் சுவரொட்டி விளம்பரத்தைக் கவனித்தாள்.. இயக்குநர் "இந்திரஜித்.." என்ற எழுத்துக்களை ஊன்றிப் பார்த்தாள்..
'இவ்வளவு நேரமும் படம் பாhத்தது போதாதா.. விளம்பரத்தையும் விழுந்து.. விழுந்து.. பார்க்கணுமா..?"
'இல்லை.. டைரக்டர் பெயரைப் படித்தேன்.."
'அடேங்கப்பா.. அதைப் படிக்கவில்லைன்னா.. உனக்கு அந்த டைரக்டரின் பெயர் தெரியாமல் போய் விடுமாக்கும்.. அதுதான் மூச்சுக்கு முந்நூறு தடைவ.. "இந்திரஜித்.. இந்திரஜித்..ன்னு ஜெபிக்கிறேயே.. அப்புறம் ஏன் போஸ்டரைப் பார்க்கிறே..?
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#rcnovelsaudio
#ramanichandrantamilnovels
#lovestorytamil
#audiobook
#audionovels
#audionovelsintamil
#newtamilnovels
#love
#lovestorytamil
#tamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels