Sachidhandha swami Miracles | சற்குரு சச்சிதானந்த சுவாமிகள் செய்த அற்புதங்கள் - சாது.தாம்பரானந்தம்
VELMAHESH
0:00 / 0:00
Sachidhandha swami Miracles | சற்குரு சச்சிதானந்த சுவாமிகள் செய்த அற்புதங்கள் - சாது.தாம்பரானந்தம்
1 938 просмотров · 3 года назад
VELMAHESH
7,83 тыс. подписчиков
1 938 просмотров · 3 года назад
#miracles #sachidhandha #sarguru #சற்குரு #sachidhandhaswami #tambaram #சச்சிதானந்தசுவாமி
சற்குரு சச்சிதானந்த சுவாமிகள் செய்த அற்புதங்கள்
Speech by - சாது.தாம்பரானந்தம் l Sachidhandha swami Miracles
சற்குரு சரணம்
அகண்ட பரிபூரண சச்சிதானந்த. சற்குரு சுவாமிகள் 19.11.1946 ஆம் ஆண்டு சென்னை அரசாங்க நிலையத்தில் விதேக. முக்தி அடைந்து தாம்பரம் குருக்ஷேத்திரம்ப் புண்ணிய பூமியில் 21.11.1946 வியாழக்கிழமை அன்று சாது பெருமக்கள் மற்றும் சபை அன்பர்களால் சமாதி ஸ்தாபனம் செய்யப்பட்டது
சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த ஐந்தாம் நாள் ஈசான்ய மூலையில் இருந்து ஒரு அகண்டாகார ஜோதி வந்து சுவாமியின் சமாதியின் மேல் பிகாசித்துச் சமாதியினுள் ஐக்கியமாகிவிட்டது. அவ்வதிசய அற்புதத்தைக் கண்டு களித்த அடியார்களும்,பக்தர்களும் மிகவும் பயபக்தியோடு பூஜை வழிபாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
அன்று அருள் பலித்தது போல் இன்று வரை 75 ஆண்டுகளாக, வந்து திருசமாதியைத் தரிசித்துச் செல்லும் பல்லாயிரக் கணக்கான உளளூர் வெளி ஊர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு அன்பர்களும், பக்தர்களும் ;எங்கிருந்து குருபரனை மானசீகமாக உள்ளன்போடு நினைக்கும் திருத்தொண்டர்களுக்கும் அமைதியும், மனோசாந்தியும், அருளாசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சற்குருபரனுடைய வேதாந்தத் தத்துவ அருள் வாக்குகள் உலகம் உள்ளளவும் மக்களுக்கு ஆன்மீகப் பாதைக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
ஞான சற்குருபரனின் 76ஆம் ஆண்டு குருபூஜை17.11.2022 கார்த்திகை முதல் நாள் வியாழன் அன்று மகா குருபூஜை அன்பர்களும் பக்தர்களும் குருபூஜையில் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டி கொள்கிறோம் .
பூரண நம்பிக்கையுடன் சரண்டைந்து குருவின் தத்துவங்களை விசாரணை செய்து சாதனை புரிந்தால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட பரிபூரண ஆன்மலாம் எய்தலாம்.
#sarguru #sachidhandhasabai