Thanjavooru Mannu Eduthu 4k Song | Porkkaalam | Murali | Meena | Vairamuthu | Krishnaraj | Deva Song
Master Music Collection Songs
0:00 / 0:00
Thanjavooru Mannu Eduthu 4k Song | Porkkaalam | Murali | Meena | Vairamuthu | Krishnaraj | Deva Song
24 978 просмотров · 2 дн. назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
24 978 просмотров · 2 дн. назад
@mastermusiccollectionsongs #krishnaraju #deva #tamilsong #meena #murali #song #hit #hitsong
Porkkaalam is a 1997 Indian Tamil-language drama film written and directed by Cheran. The film stars Murali, Meena and Sanghavi. It was released on 30 October 1997,Diwali, and became a huge success. The film was remade in Telugu as Manikyam (1999), in Hindi as Meri Pyaari Bahania Banegi Dulhania (2001),and in Kannada as Odahuttidavalu (2006).
Song : Thanjavooru Mannu Eduthu
Singer : Krishnaraj
Music : Deva
Lyrics : Vairamuthu
Movie : Porkkaalam
Staring : Murali, Meena ,Sanghavi. & Other
Director : Cheran
Release Yaer : 30 October 1997
_______________________________________
Thanjavooru Mannu Eduthu Song Lyrics ...............................................
பெண் : ஆஹா ம்ம்ம்ம்....ஆஹா.....ம்ம்ம்
ஆஆ....ஆஅ....ஆஅ....
ஆஹா ம்ம்ம்ம்....ஆஹா.....ம்ம்ம்
ஆஆ....ஆஅ....ஆஅ....
ஆண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆ
ஆஆஆ.....ஆஆ....ஆஆ
ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல
பொம்மையில்ல உண்மை
ஆண் : எத்தனையோ பொம்மை
செஞ்சேன் கண்ணம்மா...ஆஆ.....
எத்தனையோ பொம்மை
செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல
மின்னுமா பதில் சொல்லம்மா
ஆண் : தந்தானே தந்தானே
தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே
தந்தானே தந்தானே
தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே
பெண் : ஆஅ....அஹா....ஆஆ....
ஆஆ.....ஆஅ.....ஆஅ.....அஹா.....ஆஅ...
ஆஆ.....ஆஅ.....ஆஅ.....அஹா.....ஆஅ...
ஆண் : மூக்கு செஞ்ச
மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச
மண்ணு அது பொன்னூரு
ஆண் : காது செஞ்ச
மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு
மட்டும் தேனூரு
ஆண் : கருப்புக் கூந்தல் செஞ்சது
கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது
சங்ககிரி மண்ணுங்க
ஆண் : வாயழகு செஞ்சதெல்லம்
வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது
முல்லையூரு மண்ணுங்க
ஆண் : நெத்தி செய்யும் மண்ணுக்கு
சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து
நெத்தி செஞ்சேன் பாருங்க
ஆண் : தந்தானே தந்தானே
தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே
ஆண் : தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல
பொம்மையில்ல உண்மை
ஆண் : தங்கவயல்
மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி
மண்ணெடுத்தேன் தனத்துக்கு
ஆண் : வாழையூத்து
மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு
மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
ஆண் : காஞ்சிபுரம் வீதியில
மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன்
சின்னப்பொண்ணு வெரலுக்கு
ஆண் : பட்டுக்கோட்டை ஓடையில
மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில
மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஆண் : ஊரெல்லாம் மண்ணெடுத்து
உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து
உசுரு தந்தேன் கண்ணுக்கு
ஆண் : தந்தானே தந்தானே
தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே
ஆண் : போடு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல
பொம்மையில்ல உண்மை
ஆண் : எத்தனையோ பொம்மை
செஞ்சேன் கண்ணம்மா ஆஆ.....
எத்தனையோ பொம்மை
செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல
மின்னுமா பதில் சொல்லம்மா
ஆண் : தந்தானே தந்தானே
தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே
என்னோட மயிலே
போடு......
ஆண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆ
ஆஆஆ.....ஆஆ....ஆஆ