வள்ளல் பெருமான் அவதார திருநாள் அக்டோபர்2026 Part 5 of 5
Arutperumjothi Trust
0:00 / 0:00
வள்ளல் பெருமான் அவதார திருநாள் அக்டோபர்2026 Part 5 of 5
50 просмотров · 8 дней назад
Arutperumjothi Trust
46 подписчиков
50 просмотров · 8 дней назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை அகத்தியர் ஆலயத்தில் திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமானின் 204-வது அவதார தினவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
காலை 5:30 மணிக்குச் சன்மார்க்கக் கொடியேற்றி அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதி,வடலூர் புனிதத்தீர்த்த கலசப் புறப்பாடு நடைபெற்றது.ஜோதி தரிசனத்துடன் காலை நிகழ்ச்சி நிறைவுற்றது.
காலை 10மணிக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் இலக்கியத் துறை தலைவர் மற்றும் பொறுப்பு பதிவாளர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் குருநாதர் தவத்திரு. தம்பையா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றில் கல்வெட்டை திறந்து வைத்து "வள்ளல் குருராயன்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் டாக்டர்.சிவகன்னு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர். பா.ராஜேந்திரன் அவர்கள் சன்மார்க்க சொற்பொழிவும், நன்றியுறையும் ஆற்றினார்.
மாலை நிகழ்ச்சியாக அகல்விளக்கு பூஜையும், குரு வழிபாடும், தியானமும், ஜோதி தரிசனமும், வடலூர் புனித தீர்த்தம் வழங்குதலும் நடைபெற்றது. சிறப்பு இசை நிகழ்ச்சியாக நாதஸ்வர இளம் சுடரொளி T.M.S ஜெய்கணேஷ் குழுவினரால் இசை நிகழ்ச்சி நடத்தப்பெற்று விழா இனிதே நிறைவடைந்தது.
சற்குரு இராமலிங்க வள்ளல் பெருமான் திருவடிகள் வாழ்க வாழ்க