Перейти к содержимому

திருவாசகம் - கண்டபத்து (இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்)

Bhairava Yugam

0:00 / 0:00

திருவாசகம் - கண்டபத்து (இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்)

21 053 просмотра · 1 г. назад
Bhairava Yugam
119 тыс. подписчиков
21 053 просмотра · 1 г. назад
திருவாசகம் - கண்டபத்து திருச்சிற்றம்பலம் இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. ⁠475 வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. ⁠476 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. ⁠477 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. ⁠478 சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. ⁠479 பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. ⁠480 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. ⁠481 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே. ⁠482 பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. ⁠483 பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. ⁠484 திருச்சிற்றம்பலம் #SriThiripuraBhairaviAmbikaSamed #SriBhairaveshwaraSwami #Thavathirubhairavaswamigal #Sribhairavanilayam #Bhairavartemple #kalabhairavatemple ------------------------------------------------------------------ 📍 Sri Bhairava Nilayam, kandhikuppam, Bargur (Taluk), krishnagiri (dt), Tamilnadu. 📲+919445291224 ------------------------------------------------------------------- Connect with us on social media🌐 📸Instagram :  / bhairavayugam   💙Facebook :  / bhairavayugam   📺Youtube :   / @bhairavayugam   🧵Threads : https://www.threads.net/@bhairavayugam ---------------------------------------------------------------- #திருவாசகம் #கண்டபத்து #எட்டாம்_திருமுறை #மாணிக்கவாசகர் #Thirumurai #8_am_thirumurai #Thiruvasagam #kanda_pathu #ugrakalabhairavar #Bhairavayugam #sprituality #divine #devotional #devotionalchannel #devotionalvideo #kandhikuppam #krishnagiri #Bargur #Bhairavayugam #kandhikuppam_temple #kandhikuppam_kalabairavar_kovil #kandhikuppam_bhairava_temple #kandhikuppam_bhairava_kovil #kandhikuppam_kalabairavar #kandhikuppam_bairavar_temple