Перейти к содержимому

AUDIO 3 - கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Hajith Ibrahim

0:00 / 0:00

AUDIO 3 - கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

80 632 просмотра · 2 года назад
Hajith Ibrahim
476 тыс. подписчиков
80 632 просмотра · 2 года назад
கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும் மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம் இதை பேணாத பெண்ணுக்கு ஈனம் ________________________________________________________________________ சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே" என்ற பாடல். ________________________________________________________________________ #GOLDEN_VOICE LYRICS கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும் மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம் இதை பேணாத பெண்ணுக்கு ஈனம் 1 விண்கொண்ட நிலவான முகத்தில் சில விழியெச்சில் வந்து விழக்கூடும் பொன் போன்ற உன் அழகுத் தோற்றம் பல கண்ணுக்கு விருந்தாக நேரும் பெண்ணுக்கு இதுதானே கேடு நல்ல பெருமை தருமே உன் முக்காடு பாத்திமாவின் பாதை செல்லம்மா நல்ல பாதுகாப்பும் அதுவே தானம்மா அன்னை பாத்திமாவின் பாதை செல்லம்மா நல்ல பாதுகாப்பும் அதுவே தானம்மா கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும் மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம் இதை பேணாத பெண்ணுக்கு ஈனம் கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே 2 மணவாளன் உள்ளத்தில் நாளும் நீ மலராகி மனம் கமழ வேண்டும் அனலாக அவன் மாற நேர்ந்தால் அன்பு முகத்தாலே அதை மாற்ற வேண்டும் தினம் உன்னை அவன் காணும் போது முல்லைச் சிரிப்பாலே வரவேற்க வேண்டும் ஆமினாவின் பாதை செல்லம்மா இங்கு மூமினாக முந்திக் கொள்ளம்மா அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா இங்கு மூமினாக முந்திக் கொள்ளம்மா கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும் மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம் இதை பேணாத பெண்ணுக்கு ஈனம் 3 இறைவேதம் நபி போதம் எல்லாம் உன் இதயத்தில் பதிந்தாக வேண்டும் பெரியோர்கள் நல்லாசி ஏற்று உன் பெயருக்கு புகழ் தேட வேண்டும் குறையில்லா ஐவேளை வணக்கம் அருள் கொடையாக சொர்க்கத்தை கொடுக்கும் ஹதீஜாவின் பாதை செல்லம்மா உன் கல்புக்கது பாதுகாப்பம்மா ஆயிஷாவின் பாதை செல்லம்மா உன் அழகுக்கேற்ற பாதுகாப்பம்மா கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே நக கண் பார்த்து நீ நடக்க வேண்டும் மண்ணில் பெண்ணோடு பிறந்ததிந்த நாணம் இதை பேணாத பெண்ணுக்கு ஈனம் கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே ***************************************************************************