Перейти к содержимому

இயற்கை சிற்றங்களை தணிக்க மகாருத்ரயாகம் நடத்த சிவபக்தர் கோரிக்கை

திசை செய்தி

0:00 / 0:00

இயற்கை சிற்றங்களை தணிக்க மகாருத்ரயாகம் நடத்த சிவபக்தர் கோரிக்கை

111 просмотров · 4 дн. назад
திசை செய்தி
157 подписчиков
111 просмотров · 4 дн. назад
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரைச் சேர்ந்த சிவஜோதி என்ற பெண் சிவனடியார் வெள்ளிக்கிழமை வருகை தந்து தியானம் மேற்கொண்டு, கோயில் பொதுதீட்சிதர்களிடம் இயற்கை சீற்றங்களை தணிக்க 108 நாட்கள் சங்கல்பம் செய்து மகாருத்ரயாகம் நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தியானம் மேற்கொண்ட சிவனடியார் சிவஜோதி, பொதுதீட்சிதர்களின் டிரஸ்டி உ.வெங்கடேச தீட்சிதரிடம் இயற்கை சீற்றங்களின் பேரழிவை தடுக்க சிதம்பர ரகசியத்தில் உலக நன்மை அடங்கியுள்ளது எனவே கோயிலில் 108 நாள் தினமும் மாலை 108 கோவில்களில் சங்கலபத்துடன் கூடிய சிவ வழிபாடு செய்வதால் தற்போது உலகில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் அனைத்திலிருந்து விடுபடலாம் என கடிதம் அளித்து வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில் உலகளவில் விஞ்ஞானிகள் அஞ்சும் எல் நினோ வெப்ப தாக்கம் அதனுடைய பாதிப்புகள் அனைத்தில் இருந்து பாதுகாக்கப்பட லாம் என்கிறார் சிவஜோதி.