Перейти к содержимому

ஆடி வரும் அங்காளம்மா - Aadi Varum Angalamma || Udukkai Oli - Amman Song || By Ramu || Vijay Musicals

Vijay Musical

0:00 / 0:00

ஆடி வரும் அங்காளம்மா - Aadi Varum Angalamma || Udukkai Oli - Amman Song || By Ramu || Vijay Musicals

312 465 просмотров · 8 лет назад
Vijay Musical
1,97 млн подписчиков
312 465 просмотров · 8 лет назад
பாடல் : ஆடி வரும் அங்காளம்மா || ஆல்பம் : உடுக்கை ஒலி || பாடியவர் : ராமு || இயற்றியவர் : கவிநிலா || இசை : அன்புராஜ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்கள் || கடவுள் : அம்மன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || Song : Aadi Varum || Album : Udukkai Oli || Singer : Ramu || Lyrics : Kavinila || Music : Anburaj || Tamil Devotional Songs || Goddess : Amman || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals பாடல்வரிகள் || LYRICS : ஆடி வரும் அங்காளம்மா தாயே அருள்கொடுக்கும் அங்காளம்மா ஓடி வரும் அங்காளம்மா ஓடிவரும் அங்காளம்மா நான் உன்பெருமை சொல்வேனம்மா மலையனூரில் கோவில் கொண்டு மேல்மலையனூரில் கோவில் கொண்டு மக்களைத்தான் காப்பவளே மக்கள் படும் துன்பமெல்லாம் - தாயே மக்கள் படும் துன்பமெல்லாம் நீ ஒரு நொடியில் தீர்ப்பவளே ஆவேசம் கொண்டவளே - அம்மா ஆவேசம் கொண்டவளே அம்மா அதிசக்தி நாயகியே பூவாசம் விட்டு விட்டு - தாயே பூவாசம் விட்டு விட்டு நீ புறப்பட்டு வந்ததென்ன தீராத நோய் தீர்க்கவே - அம்மா தீராத நோய் தீர்க்கவே நீ திருச்சாம்பல் தருபளே போராடும் உள்ளத்திலே - தாயே போராடும் உள்ளத்திலே ஆனந்தம் சேர்ப்பவளே ஆறாத காலமெல்லாம் - நெஞ்சில் ஆறாத காலமெல்லாம் அம்மா ஆறிடச் செய்பவளே சீரோடு ஊர்வாழ்வே சீரோடு ஊர்வாழ்வே உன் படியேறி வந்தேனம்மா புற்றாக அமர்ந்தவளே - அம்மா புற்றாக அமர்ந்தவளே தாயே புரிவாயே கருணையம்மா பித்தாக வந்தவரை - தாயே பித்தாக வந்தவரை நீ பிரம்பாலே தெளியவைப்பாய் சித்தாடை கட்டிக்கிட்டு - அம்மா சித்தாடை கட்டிக்கிட்டு நீ சிலம்பாட்டம் போட்டுக்கிட்டு வித்தாரக் கன்னியம்மா - நீ வித்தாரக் கன்னியம்மா ஒரு விடைசொல்ல வேணுமம்மா எலும்பாலே மாலையிட்டு - அம்மா எலும்பாலே மாலையிட்டு நீ இங்கு வந்து சேர்ந்ததென்ன மண்டைஓடு கையில் கொண்டு - தாயே மண்டைஓடு கையில் கொண்டு நீ மயானத்தில் நின்றதென்ன சாம்பலில் பள்ளிகொண்டு - அம்மா சாம்பலில் பள்ளிகொண்டு இந்த ஜகமாளும் மாயமென்ன ஆணவத்தை அடக்கிடவே - தாயே ஆணவத்தை அடக்கிடவே நீ ஆவேசம் கொண்டதென்ன பில்லியோடு சூனியத்தை - அம்மா பில்லியோடு சூனியத்தை நீ விரட்டிவிட்டு வேணுமம்மா செய்தவினை அத்தனையும் - தாயே செய்தவினை அத்தனையும் செயலற்றுப்போகுதாம்மா வெள்ளிப்பிராபெடுத்து - அம்மா வெள்ளிப்பிராபெடுத்து வீதிவலம் வருபவளே நீ துள்ளி வகையிலே - தாயே துள்ளி வகையிலே மக்கள் துன்பமெல்லாம் தீருதம்மா தங்க பிரம்பெடுத்து - அம்மா தங்க பிரம்பெடுத்து தாவி வரும் அங்காளம்மா நீ தாவி வகையிலே - தாயே தாவி வகையிலே எனக்கு தக்கத்துணை நீதானம்மா நடல சுடல வனம் - அம்மா நடல சுடல வனம் நடுசுடல தில்ல வனம் தில்ல வனத்த விட்டு - தாயே தில்ல வனத்த விட்டு நீ திரும்பிவர வேணுமம்மா அமாவாசை ராத்திரியில் - தாயே அமாவாசை ராத்திரியில் மருளாடி வருபவளே மருளாடி வகையிலே - அம்மா மருளாடி வகையிலே மனசெல்லாம் நிறையுதம்மா கலைவாணி சாபத்தினால் - அம்மா கலைவாணி சாபத்தினால் நீ அங்காளி ஆனாயம்மா அலங்கார கோலம் விட்டு - தாயே அலங்கார கோலம் விட்டு அலைந்தோடித் திரிந்தாயம்மா மீன்பிடிக்கும் மக்கள் உந்தன் - அம்மா மீன்பிடிக்கும் மக்கள் உந்தன் அம்மா மேனியிலே நீரை ஊற்றி ஆவேசம் குறைத்ததனால் - தாயே ஆவேசம் குறைத்ததனால் நீ அருளாசி தந்தாயம்மா இலைபோட்டு மீனும் வைத்து - அம்மா இலைபோட்டு மீனும் வைத்து உன் இதயத்தை குளிரவைத்தார் உள்ளம் குளிர்ந்ததனால் - நீ உள்ளம் குளிர்ந்ததனால் இந்த ஊருக்கு நன்மை செய்தாய் சக்தி வடிவானவளே - அம்மா சக்தி வடிவானவளே சங்கத்தைத் தீர்ப்பவளே பக்தியோடுப் பாடிவந்தோம் - நாங்க பக்தியோடுப் பாடிவந்தோம் பார்வதியே பாருமம்மா சித்தமெல்லாம் நெறஞ்சவளே - அம்மா சித்தமெல்லாம் நெறஞ்சவளே செய்த பிழை பொறுப்பாயம்மா சொத்து சுகம் தேவையில்லே - தாயே சொத்து சுகம் தேவையில்லே நீ கூடவர வேணுமம்மா பத்துக்கரம் கொண்டவளே - அம்மா பத்துக்கரம் கொண்டவளே என் பாவங்களைத் தீருமம்மா நித்தம் உன்ன நெனச்சிருப்பேன் - தாயே நித்தம் உன்ன நெனச்சிருப்பேன் நல்ல நேரம்வர பாருமம்மா சுடலையிலே இருப்பவளே - அம்மா சுடலையிலே இருப்பவளே விடும் சூரையள்ளித் தின்பவளே சூரைவிடும் அன்பருக்கு - தாயே சூரைவிடும் அன்பருக்கு வரும் சோதனைகள்த் தீர்ப்பவளே பேயாட்டம் போட்டுவரும் - அம்மா பேயாட்டம் போட்டுவரும் பெரியவளே அங்காளம்மா சாத்தானை ஓடவைக்கும் - தாயே சாத்தானை ஓடவைக்கும் சிவசங்கரியும் நீதானம்மா பாவாடை ராயனுக்கு - அம்மா பாவாடை ராயனுக்கு அருள் கொடுத்த அங்காளம்மா நாள்தோறும் உன்பேரையே - தாயே நாள்தோறும் உன்பேரையே நான் சொல்லி வருவேனம்மா சிவனாரின் பித்தமெல்லாம் - அம்மா சிவனாரின் பித்தமெல்லாம் தீர்த்து வைத்த அங்காளியே மலையேற வேணுமம்மா - தாயே மலையேற வேணுமம்மா அருள் மழைபெய்யச் செய்வாயம்மா ஓடி வரும் அங்காளம்மா நான் உன்பெருமை சொல்வேனம்மா தாயே உன்பெருமை சொல்வேனம்மா நான் உன்பெருமை சொல்வேனம்மா