அருள் மழை பொழியும் ஆரோக்கியத் தாய் மரியே | Arul Mazhai
DJ Gospel
0:00 / 0:00
அருள் மழை பொழியும் ஆரோக்கியத் தாய் மரியே | Arul Mazhai
324 просмотра · 7 дней назад
DJ Gospel
541 подписчик
324 просмотра · 7 дней назад
அருள் மழை பொழியும் ஆரோக்கியத் தாய் மரியே
உம்மை அண்டி வந்தோரின் அடைக்கலத் தாய் நீயே
துன்புறுவோரின் துயர் நீக்கும் தயைமிகு தாய் மரியே
திருமகனிடம் தினம் எமக்காய் பரிந்துரைக்கும் தாய் நீயே!
அருள் மழை பொழியும் ஆரோக்கியத் தாய் மரியே
உம்மை அண்டி வந்தோரின் அடைக்கலத் தாய் நீயே
அமல உற்பவியாய் கருவில் அருள் பெற்றவளே
அமலனை உதரத்தில் சுமந்திட பிறந்தவளே
“ஆகட்டும்” என்று சொல்லி இறைவார்த்தைக்குப் பணிந்தவளே
அழியாத பேழையாய் விண்ணேற்கப்பட்ட புதிய ஏவாளே
அலகையின் அகந்தையை தாழ்ச்சியால் அழித்தவளே
இயேசுவின் வழியில் எமை என்றும் அழைத்துச் செல்பவளே!
அருள் மழை பொழியும் ஆரோக்யத் தாய் மரியே
உம்மை அண்டி வந்தோரின் அடைக்கலத் தாய் நீயே
முடமான மகனை நடமாட செய்தவளே , (எம்மில்)
முடங்கிக் கிடக்கும் எம் விசுவாசம் புதுப்பித்திடுமே
பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தவளே
பாசத்தோடு பரிந்து எம் குறைகள் நிறைவாக்குமே
கடல்மீது தவித்தோரின் தஞ்சமாய்த் திகழ்ந்தவளே
கண்ணீரில் தவிக்கும் எம்மையும் தேற்றிடுமே !
பாவிகளின் அடைக்கலமே!
பாருலகோர்க்காதரவே!
தவித்தோர்க்கு தஞ்சமே!
தயை மிகுந்த என் தாயே!
பரலோகத் தந்தையின் திருமகளே!!
பரிகாரியான மகனின் தாயாரே!
பரிசுத்த ஆவியாரின் பத்தினியே!
மூவொரு இறைவனின் திருக்கோவிலே!
எங்களுக்காக வேண்டிகொள்ளும்!
எங்களுக்காக வேண்டிகொள்ளும்!
எங்களுக்காக … வேண்டிகொள்ளும்!