Thanthai Periyar Tribute
Muthunithi
0:00 / 0:00
Thanthai Periyar Tribute
36 просмотров · 7 дней назад
Muthunithi
19 подписчиков
36 просмотров · 7 дней назад
#Thanthai Periyar Tribute, தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்!’’
கட்டை விரலோ தலையோ
இந்நாளில் எவன் கேட்டாலும்
பட்டை உரியும்
சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்
எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய்
எதிரிகளை நடுங்க வைக்கும் இடியொலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏனென்ற கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்
என் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்
வங்கத்துத் தாகூர்போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வையுண்டு
தெங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு
வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு
அதில் சாகும்வரை ஒளியுண்டு
பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின்
இவரோ படுகிழமாய்ப் போனபின்பும் பம்பரமாய்ச் சுற்றிவந்தார்
எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய்
எதிரிகளை நடுங்க வைக்கும் இடியொலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏனென்ற கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்
என் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்