Перейти к содержимому

தெருக்கூத்து கோரணப்பட்டு சுப்பிரமணி நாடக ஆசிரியர் அர்ஜுனன் ஆகா | koranapattu Subramani therukuthu

V.puthur கோவில் வரலாறு

0:00 / 0:00

தெருக்கூத்து கோரணப்பட்டு சுப்பிரமணி நாடக ஆசிரியர் அர்ஜுனன் ஆகா | koranapattu Subramani therukuthu

23 803 просмотра · 5 лет назад
V.puthur கோவில் வரலாறு
196 подписчиков
23 803 просмотра · 5 лет назад
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வழி வி.பூதூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் மற்றும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், பத்தினி தெய்வமாகிய துரோபதி அம்மன் மற்றும் இன்னும் பல தெய்வங்களுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்து 11 நாள் திருவிழா நடந்தேறியுள்ளது. முதல் நாள் திருவிழா ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சாகை வார்த்தல் செங்காடு கிராமத்திலிருந்து அம்மன் கரகம் ஜோடித்து பம்பை உடுக்கை முழங்க வீதி உலா வந்து சாகை வார்த்தல் நடந்தேறியது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு காப்பு கட்டி கோவிந்தன் கர்வம் ஜோடித்து கொடி மரம் நடப்பட்டது. இரண்டாம் நாள் திருவிழா ஸ்ரீமன் எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி யாக கோவில் சுற்றி வரப்பட்டது. மூன்றாம் நாள் திருவிழா உற்சவர் ஆகிய பெருமாள் நின்ற திருக்கோலத்தில் பின்ன மரக்கிளைகள் கொண்டு அலங்கரித்து , அர்ஜுனன் & துரோபதி அம்மன் மர சிலைகள் , கொந்தம் சாட்டை , போத்தராசா ஆகிய அனைத்தும் மாடவீதி ஆக கோவில் சுற்றி வரப்பட்டது. நான்காம் திருவிழா ஸ்ரீமன் எம்பெருமான் நாக வாகனத்தில் அமர்ந்த படியும் அம்மன் அர்ஜுனன் அலங்கரித்து வீதி உலா வந்த காட்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து எச்சரிக்கை பாடி மேளதாளம் முழங்க சிறப்பாக அன்றைய நாள் முடிந்தது. ஐந்தாம் திருவிழா ஸ்ரீமன் எம்பெருமான் வாகனம் ஆகிய கருட வாகனத்தில் அமர்ந்தபடி பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு அம்மன் அர்ஜுனன் நின்ற திருக்கோலத்தில் பம்பை மற்றும் கோவில் மேளதாளங்களுடன் பக்தர்களுக்கு வீதி உலா வந்து காட்சியளித்து எச்சரிக்கை பாடி ஐந்தாம் திருவிழா நிறைவேறியது. ஆறாம் திருவிழா ஸ்ரீமன் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மாண்ட யானை வாகனத்தின் மீது அமர்ந்த வண்ணம் சாத்துப்படி செய்து அம்மன் அர்ஜுனன் அலங்காரம் செய்து மேள தாளங்களுடன் வீதி உலா வந்து எச்சரிக்கை சிறப்பாக நடந்து. ஏழாம் திருவிழா அம்மன் அர்ஜுனன் திருக்கல்யாணம் நடந்தேறி மர சிலைகள் அலங்கரித்து அம்மனுக்கு மணியரசி கட்டிக்கொண்டு வீதி உலா நடைபெற்று முடிந்து அதை தொடர்ந்து அன்று இரவு மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அம்மன் அர்ஜுனன் காட்சி அளிக்க எம்பெருமானும் அலங்கரித்து மேளதாளங்கள் எச்சரிக்கை பாடல் முழங்க வீதி உலா வந்து நடந்து முடிந்தது அன்றைய திருவிழா எட்டாம் திருவிழா பொதுவாக எட்டாம் திருவிழா கரக திருவிழாவாக வழிபடுவது வழக்கம் பூங்கரகம் ஜோடித்து பம்பை உடுக்கைகள், சிலம்பம் ஒலி ஒலிக்க ஆடிப்பாடி (கத்தி போடுவது சிறப்பு மிக்கது இந்த ஊருக்கு) அம்மன் அர்ஜுனன் எம்பெருமான் அலங்கரித்து ஆரவாரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அருளி மேளதாளங்கள் முழங்க எச்சரிக்கை பாடல் முழங்க சிறப்பாக நடந்து முடிந்தது. ஒன்பதாம் திருவிழா வில் வளைத்து தவசு நட்டு பாரதம் பாடி அரவான் தலை வைத்து பாரதம் பாடி அரவானுக்கு சோர் அறைதல் நடைபெற்று படுகளத்தில் ஐ வ ராஜாக்களும் , நான்கு திசைகளிலும் மாறிமாறி , கொந்தம், போர்தராசா, அர்ஜுனன், ஸ்ரீமன் எம்பெருமான். போர் முடிந்து மாடவீதி யாக வந்து படுகளம் முடிந்து. யாகம் செய்து அக்னி மூட்டி நன்கு கொழுந்துவிட்டு இருந்து கொண்டு இருக்கும் அந்த வேளையில் ஒரு பக்கம் பக்தர்கள் பொங்கல் வைக்க ஒரு பக்கம் சக்தி கரகம் ஜோடித்து பம்பை உடுக்கை மேளம் களுடன் மாட வீதி வந்து பக்தர்களின் கரங் கோஷங்கள் மற்றும் ஆரவாரத்துடன் பாஞ்சாலி அம்மன் தீ மிதித்தல் என்னும் சொல்லும் படியான பூ மிதித்தல் நடைபெற்று. சக்தி கரகம் ஆடியவாறு வீதி உலா வந்து. எச்சரிக்கை பாடலுடன் சிறப்பாக நடந்து முடிந்தது. பத்தாம் திருவிழா மஞ்சள் நீராடல் பாரதப் போர் முடிந்து பாஞ்சாலி அம்மனுக்கு தீ மிதித்து மஞ்சள் நீராடி கொண்டு எம்பெருமான் வீதிஉலா காட்சி அளித்து எச்சரிக்கை பாடி மேளதாளம் முழங்க நடைபெற்று முடிந்தது அன்றைய நாள். பதினொன்றாம் நாள் திருவிழா தர்மர் பட்டாபிஷேகம் சுவாமிகள் அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க வீதி உலா வந்து தர்மருக்கு முடிசூடு விழா முடிந்தேறி போர்மன்னன் முத்தால் ராவுத்தர்கு படையல் இட்டு கும்பம் கொட்டி வர்ணித்து வணங்கி முடிந்து ஏறியது. இதன் தொடர்ச்சியாக அன்று இரவு கோரணபட்டு சுப்பிரமணி தெருக்கூத்து நாடக ஆசிரியர் அவர்கள் குழுவால் அன்று ஓர் இரவு நாடகம் நடந்தேறியது. இங்கனம் இவை அனைத்திற்கும் ஒத்துழைப்பு தந்த நாட்டாமை மலையாளம், மற்றும் ஊர் பெரியவர்கள், கிராமவாசிகள், இளைஞர்கள், மற்றும் கோவில் அர்ச்சகர் தயாநிதி, வழிபாட்டு அன்பர்கள், சுவாமி அலங்காரம் செய்த கண்ணன் லைட் செட் செய்தவர்கள், பூ வேலை செய்தவர்கள், என இன்னும் பல வகைகளில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும், இவ்வளவு நேரம் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும், 🙏மனமார்ந்த நன்றிகள் 🙏 இப்படிக்கு வி.பூதூர் கிராமவாசிகள் மற்றும் இன்னும்