Перейти к содержимому

புதன் வாசகர் வட்டம் : பேசுபவர்:மேஜர் நாராயணன் : புத்தகம்: Stray Glimpses of Bapu :காகா கலேல்கர்

GANDHI STUDY CENTRE

0:00 / 0:00

புதன் வாசகர் வட்டம் : பேசுபவர்:மேஜர் நாராயணன் : புத்தகம்: Stray Glimpses of Bapu :காகா கலேல்கர்

91 просмотр · Трансляция закончилась 6 дн. назад
GANDHI STUDY CENTRE
944 подписчика
91 просмотр · Трансляция закончилась 6 дн. назад
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 28.10.2026 அன்று (மாலை 6.45-7.45) பேசுபவர்: மேஜர். நாராயணன் புத்தகம்: Stray Glimpses of Bapu ஆசிரியர்: காகா கலேல்கர் பேச்சாளர் பற்றி: மேஜர். நாராயணன் அவர்கள் மூன்று தலைமுறைகளாக இந்திய இராணுவத்தின் மூலம் தேசத்தின் பாதுகாப்பிற்காக சேவை ஆற்றி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய சீன எல்லைப் பகுதியான சிக்கிமில் உள்ள Natula Pass பகுதியில் இந்திய ராணுவத்தில் படைத்தலைவராக பணியாற்றியவர். தெற்காசிய விளையாட்டு போட்டியில் சிலம்ப விளையாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர். 1980-களில் சென்னை ஆணழகண் (Mr.Madras) பட்டம் வென்றவர். 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் இணைந்து பணியாற்றியவர். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக ஹிப்னாட்டிசம் (அரிதுயில்) தொடர்பாக சென்னையில் பல நிகழ்ச்சிகள் நடத்தி வருவதுடன், அவ்வமைப்பின் தலைவராகவும் உள்ளார். Professional Speakers Association of India மற்றும் உலகம் முழுவதும் உள்ள Toastmaster Club ஆகிய அமைப்புகளின் கிளைகளை சென்னையில் தொடங்கிய நிறுவனர்களில் ஒருவர். இதற்கு முன்னர், புதன் வாசகர் வட்டத்தில் “Understanding the Founding Fathers”, “The Old Man and the Sea”, “Aurangzeb: The Man and the Myth”, “பாரதியும் காந்தியும்” மற்றும் “இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”, “மகாதேவ தேசாய் – காந்தியின் நிழல்”, “நேசமணியின் வாழ்வும் பணியும்”, “Thrown to the wolves: Abdul Ghaffar”, “In Honour of Dr.Annie Besant” மற்றும் “சுந்திர சரித்திரம்” ஆகிய நூல்களை அறிமுகம் செய்து பேசியுள்ளார். நூல் பற்றி: என் வாழ்வே என் செய்தி என்று சொன்னவர் காந்தியடிகள். தான் எழுதியவை, பேசியவை விட தான் வாழ்ந்த வாழ்வே தனக்கான தராசு என்று சொன்னவரும் அவர். காந்தியடிகளின் வாழ்வும், மக்களுக்கான அவருடைய செய்தியும் பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்தவை. அதனால் அவர் வாழ்வில் நடந்த சிறு சம்பவங்களும் தனித்துவம் வாழ்ந்தவையாக மிளிர்கின்றன. எனவே, அவருடைய் தத்துவங்கள் என்று கருதப்படுகின்றவற்றைப் பற்றிய நூல்களைப் போலவே அவருடைய வாழ்க்கையை நமக்கு படம் பிடித்துக் காட்டும் நூல்களும் மிக முக்கியமானவை. அவர் வாழ்வின் சம்பவங்களை அவரோடு இருந்தவர் பலர் எழுதியுள்ளனர். அதிலும் குறிப்பாக, அவரோடு இணைந்து பணியாற்றிய காகா கலேல்கர் அவர்கள் எழுதிய Stray Glimpses of Bapu என்ற நூல் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நூல் நவஜீவன் டிரஸ்ட் மூலம் 1950-ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றி: காந்தியடிகளின் சீடர்கள் பலர் அவரவளவுக்கு பெரும் சாதனையாளர்கள். ஆன்மிக சீடர்கள், அரசியல் சீடர்கள் என காந்தியடிகளின் சீடர்கள் வகைப்படுத்தும் வழக்கமும் உண்டு. அவ்விரண்டு வகைக்குள்ளும் அடங்கும் ஒருவராக காகா கலேல்கர் (01.12.1885 - 21.08.1981) விளங்கினார். பல காந்திய தலைவர்கலைப் போல விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பல துறைகளில் சாதித்தவர். காந்தியடிகளால் உருவாக்கப்பட்டு இன்றளவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விளங்கும் குஜராத்தி வித்யாபீடத்தினை உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். சுதந்திரத்திற்குப் பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய்வதற்கு முதன்முதலாக 1953-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவராக பணியாற்றியவர். 1964-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான நூல்களை எழுதியிருக்கிறார். இவரது ஜீவன் லீலா நூலுக்கு சாகித்ய அகாடமியின் விருது 1965-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தொடர்புக்கு: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58.வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600017 கைபேசி எண்கள்: 9790740886 (ம) 9952952686