Перейти к содержимому

பிள்ளையார்பட்டி மோதகம்பூரணம் இல்லாமல் ஈஸி முறை!

Druti's Kitchen & Vlogs

0:00 / 0:00

பிள்ளையார்பட்டி மோதகம்பூரணம் இல்லாமல் ஈஸி முறை!

17 072 просмотра · 1 день назад
Druti's Kitchen & Vlogs
4,9 тыс. подписчиков
17 072 просмотра · 1 день назад
🪔 பிள்ளையார்பட்டி மோதகம் | பூரணம் தேவையில்லை! பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் பிரசாதமாக வழங்கப்படும் பாரம்பரியமான பிள்ளையார்பட்டி மோதகத்தை, பூரணம் எதுவும் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் இன்று செய்து காட்டியிருக்கிறேன். இந்த மோதகம் மிகவும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். விநாயகர் சதுர்த்தி மற்றும் விசேஷ நாட்களில் நெய்வேத்யமாக செய்ய மிகவும் ஏற்றது. 🙏 தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 1/2கப் பாசிப்பருப்பு – ½ கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன் நெய் – 2 ஸ்பூன் தேங்காய் துருவல் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து கழுவி, சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து, ஈரமான துணியில் பரப்பி ஈரம் போகும் வரை உலர விடவும். ஈரம் போனதும், ஒரு வாணலியில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நல்ல வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்மா ரவா / இட்லி ரவா பதத்திற்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். மாவு ரொம்ப நைசாகவும் இருக்கக்கூடாது, ரொம்ப கொரகொரப்பாகவும் இருக்கக்கூடாது. ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, அரைத்த மாவை நன்றாக கலந்து வேக வைக்கவும். அதே நேரத்தில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்லக் கரைசலை வேக வைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து, தேங்காய் துருவல், நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். கலவை நன்றாக பதத்திற்கு வந்ததும், கையில் சிறிது நெய் தடவி மோதகம் பிடிக்கும் பதத்திற்கு எடுத்து அழகாக மோதகம் செய்து, ஆவியில் வேகவைத்தால் சூப்பரான பிள்ளையார்பட்டி மோதகம் தயார்! 🪔🙏❤️ பூரணம் தேவையில்லை… மிகவும் ஈஸியான முறையில் வீட்டிலேயே செய்து பாருங்கள்! 😍 #PillayarpattiModhagam #Modhagam #VinayagarChaturthi #GaneshChaturthi #PillayarChaturthi #TraditionalRecipe #TamilCooking #Prasadam #EasyModhagam #பிள்ளையார்பட்டிமோதகம் #மோதகம் #விநாயகர்சதுர்த்தி