வெள்ளிவீதியில் ஒரு வள்ளித்தாய் | சங்க காலக் காதல் கதை | AI CINEMATIC VIDEO
வண்ணத்தமிழ் வகுப்பறை
0:00 / 0:00
வெள்ளிவீதியில் ஒரு வள்ளித்தாய் | சங்க காலக் காதல் கதை | AI CINEMATIC VIDEO
655 просмотров · 2 нед. назад
வண்ணத்தமிழ் வகுப்பறை
6,04 тыс. подписчиков
655 просмотров · 2 нед. назад
2000 ஆண்டுகளுக்கு முன்
ஒரு காதல் கதை!
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம்...
பசுமை நிறைந்த அடர்ந்த காடுகள், விண்ணைத் தொடும் மலைகள், பாய்ந்தோடும் அருவிகள், பறவைகளின் இன்னிசை, இயற்கையோடு இணைந்த மலைவாழ் தமிழர்களின் அழகிய வாழ்க்கை!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த பண்பாட்டையும், காதல் உணர்வுகளையும் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
அத்தகைய சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு கற்பனையும், கலைநயமும் கலந்து உருவாக்கப்பட்ட காதல் கதைதான்
“வெள்ளிவீதியில் ஒரு வள்ளித்தாய்”.
வள்ளித்தாய், ஆதன், வீராள் ஆகியோரின் உணர்வுகளோடு சங்ககாலக் குறிஞ்சி நிலத்தின் இயற்கை அழகையும் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் திரைக்காட்சிகளாக உருவாக்கியுள்ளோம்.
இந்தக் காணொளி குறித்த உங்கள் கருத்துகளை Comment பகுதியில் கூறுங்கள். உங்களின் மேலான கருத்துகள் எங்களின் உழைப்பை மேலும் மெருகூட்டும். நன்றி.
அன்புடன்,
வண்ணத்தமிழ் வகுப்பறை.
***********************************************
தங்களின் கனிவான பார்வைக்கு...
நல்வணக்கம். கல்விக் காணொளிகள் மூலம் அனைவருக்கும் சமமான, தரமான, இலவசக் கல்வியை இலக்காக வைத்து பணியாற்றி வருகிறோம். அனைத்து வகுப்புகளுக்குமான தமிழ்ப் பாடம், செய்யுள், துணைப்பாடம், இலக்கணம் குறித்த காணொளிகளை உருவாக்கிப் பதிவிட்டு வருகிறோம்.
இந்த வலையொளிப் பக்கத்தில் காணொளிகள் மட்டுமல்லாது கடிதங்கள், கட்டுரைகள், பாடக்குறிப்புகள் போன்றவற்றையும் PDF வடிவில் வழங்கி வருகிறோம். மேலும் இப்பக்கத்தில் இணையவழித் தேர்வுகளும் வழங்கி வருகிறோம். அவசியமான கல்விச் செய்திகளைக் காணொளியாகவும், மின் நூலாகவும், PDF வடிவக் குறிப்புகளாவும் அளித்து வருகிறோம். அனைத்தையும் இலவசமாகவே பொதுவெளியில் முன்வைத்து உள்ளோம்.
எங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெறத் தாங்கள் உதவ விரும்பினால், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் தாங்கள் விரும்பும் தொகையினை செலுத்தி உதவலாம். தங்களின் உதவி எங்களின் பணியை மேலும் மெருகூட்டும். நன்றி.
Name : Mohanraj Chandrasekaran
A/C No. : 1339131000450
IFSC Code : CNRB0001510
SWIFT Code : CNRBINBBBFD
A/C Type : Savings Bank
Bank : Canara Bank
Branch : Tirupur PN Road Branch
GPay : +91 9150175868
***********************************************
இக்கதையின் மூலம் :
நூல் : குறுந்தொகை ( பாடல் எண் :146 )
பாடல் :
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே
ஆசிரியர் : வெள்ளிவீதியார்
பாடலின் பொருள் :
தோழி இன்று தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத் தலைவன் போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசப் பொருட்களைக் கொண்டுவந்து அவைமுன் வைத்துள்ளான்.
அவர்களும் நன்று நன்று என்று மகிழ்கின்றனர். நம் உறவினர்களும் உங்களின் வருகை எங்களுக்குப் பெருமை என்று மகிழ்கின்றனர். இதற்கு முன் நம் ஊரில் பிரிந்திருப்பவர்களைச் சேர்த்துவைக்கும் இப்படிப்பட்டவர்கள் இருந்தார்களா என்ன?
புலவர் : வெள்ளிவீதியார்
திணை : குறிஞ்சித்திணை
துறை : தோழி தலைமகட்குக் கூறியது.
***********************************************
#SangamLiterature
#Kurunthogai
#TamilLoveStory
#VannattamilVagupparai
#வண்ணத்தமிழ்வகுப்பறை