ஜெம் நிறுவனர் வீரமணி மீது வழக்கு - சிபிஐ விசாரணை கோரி தமிழக #பாஜக #narayananthirupathy வலியுறுத்தல்
Vande Mataram TV
0:00 / 0:00
ஜெம் நிறுவனர் வீரமணி மீது வழக்கு - சிபிஐ விசாரணை கோரி தமிழக #பாஜக #narayananthirupathy வலியுறுத்தல்
176 просмотров · 3 дня назад
Vande Mataram TV
982 подписчика
176 просмотров · 3 дня назад
#tnbjp Chief Spokesperson Sri #narayananthirupathy press meet - kamalaalayam - Vande Mataram Tv - 22.9.26 - 12 noon
ஊடக அறிக்கை (Press Note)
பாரதிய ஜனதா கட்சி (BJP) – தமிழ்நாடு
நாள்: 22 செப்டம்பர் 2026
இடம்: கமலாலயம் சென்னை
தலைப்பு: ஜெம் நிறுவனர் வீரமணி மீது வழக்கு - சிபிஐ (CBI) விசாரணை கோரி தமிழக பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் திரு நாராயணன் திருப்பதி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வலியுறுத்தல்!
தமிழகத்தில் தற்போதைய தமிழக அரசிடம் (தவெக) நிர்வாகத் திறனோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாததால் மக்கள் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ள இந்த அரசை பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறினார்.
போக்சோ (POCSO) வழக்குகளில் அலட்சியம் – சிபிஐ (CBI) விசாரணை தேவை!
வீரமணி விவகாரம் - ஜெம் கிரானைட்ஸ் வழக்குகளில் சிறைக்குள் நடக்கும் ரகசிய விசாரணைகள் காவல்துறையினராலேயே ஊடகங்களில் மூலம் வெளியில் கசியவிடப்படுகின்றன. காவல்துறை அதிகாரிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுவது நிர்வாகக் சீர்கேட்டைக் காட்டுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 'சிவசங்கர் பாபா' போன்ற போலி சாமியார்களின் போக்சோ வழக்குகள் இன்னும் நீதிமன்ற விசாரணைக்கே (Trial) வராமல் முடக்கப்பட்டுள்ளன. போக்சோ வழக்குகளை 1-2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை இந்த அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது.
குற்றவாளிகள் தப்பிப்பதையும், ஆதாரங்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க வீரமணி வழக்கு உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கிராமப்புற ஏழை மாணவர்களின் நல்வாழ்வு - நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி தருக!
நவோதயா பள்ளிகள் அமைந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களின் மற்றும் அவர்களின் அபிமானிகளின் தனியார் பள்ளி வியாபாரம் கெட்டுப்போய்விடும் என்ற ஒரே காரணத்திற்காக இப்பள்ளிகள் திட்டமிட்டு எதிர்க்கப்படுகின்றன.
மத்திய அரசின் உறுதிமொழி: நவோதயா பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியும், 8 முதல் 10 வரை தமிழ் பாடமும் கட்டாயம் என மத்திய அரசு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது.
சர்வதேச தரத்திலான கல்வி ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்த விவகாரத்தில் பின்னாலிருந்து தவறான வழிநடத்துதலைத் தரும் சக்திகளைப் புறந்தள்ளி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 3 மாத காலத்திற்குள் நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு – சுகாதாரத் துறை தோல்வி!
குழந்தைகளின் உயிருடன் விளையாடும் அரசு: அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைக் (Pre-term babies) காப்பாற்றத் தேவைப்படும் 'சர்பேக்டன்ட்' (Surfactant) போன்ற அத்தியாவசியத் திரவ மருந்துகள் கடந்த 3, 4 மாதங்களாகக் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது சுகாதாரத் துறையின் மிக மோசமான நிர்வாகத் தோல்வியாகும். உடனடியாக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாட்டைப் போக்கி, பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
போக்குவரத்து சீர்கேடு மற்றும் குழந்தை கடத்தல் அதிகரிப்பு!
தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஒருவழிப் பாதையில் எதிரே வருவது, இருசக்கர வாகனத்தில் மூவர்/நால்வர் செல்வது போன்ற விதிமீறல்களால் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. காவல்துறை வெறும் அபராதம் (Fine) வசூலிப்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. குற்றங்களையும் விபத்துகளையும் முன்கூட்டியே தடுக்கத் தவறிவிட்டு, "குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என முதலமைச்சர் காலரைத் தூக்கிக் கொள்வது பெருமைக்குரியது அல்ல இது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது.
தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படியே, மருத்துவமனைகள், திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுவது அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது.
மின்தட்டுப்பாடு மற்றும் கூட்டணி கட்சிகளின் இரட்டை வேடம்!
2014-க்கு முன்பு இருந்த மோசமான மின்தட்டுப்பாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு, மத்திய தொகுப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Solar, Windmill) உதவிகள் மூலம் சீரமைத்தது. ஆனால், இந்த தவேக ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாததால் மீண்டும் மின்வெட்டு அரங்கேறி வருவது கண்டிக்கத்தக்கது .
கூட்டணி கட்சிகளின் பேரம்: இந்த அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைப் பற்றி கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கூட்டணி கட்சிகளே வெளியில் விமர்சிக்கிறார்கள், ஆனால் ஆட்சியை ஆதரிக்கிறார்கள். இது வெறும் தேர்தல் பேரம் பேசுவதற்காக நடத்தப்படும் பொம்மலாட்ட நாடகம் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
முடிவுரை:
முதலமைச்சர் விஜய் அவர்கள் தொடர் வேலை செய்வதினால் மனஅழுத்தம் ஏற்ப்பட்டு அதைபோக்க லண்டன் சென்றார் என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அரசு முறைப் பயணம் என்று கூறி லண்டன் சென்ற அமைச்சர்கள், அங்கு என்ன முதலீடுகளை ஈர்த்தார்கள் என்ற வெள்ளை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.மேலும் நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்க்காமல் CAR RACE போன்ற ஆடம்பர விளையாட்டுக்களை காண சென்றது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
இங்ஙனம்,
ஊடகப் பிரிவு,
பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு