மாற்றி யோசித்ததால் மகத்தான வெற்றி.. இயற்கை விவசாயத்தில் சாதித்த தம்பதியர் | Malarum Bhoomi
Makkal TV
0:00 / 0:00
மாற்றி யோசித்ததால் மகத்தான வெற்றி.. இயற்கை விவசாயத்தில் சாதித்த தம்பதியர் | Malarum Bhoomi
1 434 просмотра · 6 месяцев назад
Makkal TV
1,42 млн подписчиков
1 434 просмотра · 6 месяцев назад
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வட்டம் எருமை வெட்டிபாளையம் பகுதியில் இயற்கை முறையில் தேன் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வரும் திருமதி நந்தினி அவர்களின் சாதனைப் பயணத்தை இந்த காணொளி பதிவு செய்கிறது.
பொறியியல் பட்டதாரியான நந்தினி மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் அவர்கள் முன்பு மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். ஆனால் இயற்கை மற்றும் வேளாண்மையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக புதிய முயற்சியாக தேனீ வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றை தனது வீட்டின் மாடியில் தொடங்கினார். ஆரம்பத்தில் சுமார் 300 முதல் 400 கோழிகளையும் தேனீக்களையும் வளர்த்து வந்தனர்.
அவர்களின் முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் 400 மாமரங்கள், 100 தேனீ பெட்டிகள் மற்றும் 50 செம்மறியாடுகள் வளர்த்து வெற்றிகரமாக பண்ணை நடத்தி வருகின்றனர்.
இந்த பண்ணையில் தயாராகும் இயற்கை தேன் ஒரு கிலோக்கு சுமார் ₹1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை வேளாண்மை, தேனீ வளர்ப்பு, மாமரம் மற்றும் ஆடு வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து லாபகரமாக செய்து வரும் இவரது அனுபவங்கள், சவால்கள் மற்றும் வெற்றிக் கதையை இந்த காணொளியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இளம் தலைமுறையினர் வேளாண்மையை தொழிலாக தேர்வு செய்யும் போது எந்தவாறு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இவரது முயற்சி விளங்குகிறது.
#NaturalFarming #HoneyFarm #Beekeeping #OrganicFarming #WomenFarmer #AgricultureSuccess #HoneyBusiness #GoatFarming #MangoFarm #TamilAgriculture #VillageSuccess #AgriEntrepreneur #FarmSuccessStory #IndianFarming
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv