தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக அங்கீகார மோசடி
Arappor Iyakkam
0:00 / 0:00
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக அங்கீகார மோசடி
22 134 просмотра · 7 часов назад
Arappor Iyakkam
89,9 тыс. подписчиков
22 134 просмотра · 7 часов назад
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU), 74 தனியார் கல்லூரிகளுக்கு 2023 - 2025 காலகட்டத்தில் வழங்கிய இணைவு அங்கீகாரத்தில் மோசடி
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளுக்கான தனியார் ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுப் மேற்கொண்டதில் கடுமையான மோசடி இருப்பதாக, RTI இல் தகவல் கிடைத்துள்ளது.
இயற்பியல் விதியை மிஞ்சி - ஒரே நாளில் 5 கல்லூரிகளில் ஆய்வு செய்ததாகப் பதிவு!
29.03.2023 அன்று Dr.M.Rajakumar - ஆய்வுக்குழுத் தலைவர்,
A)Sri Ramakrishna College of Education,பெரம்பலூர்,
B)E.S.Subramaniain Memorial College of Education,திருவள்ளூர்
C)TVM College of Education,திருவள்ளூர்
D)Punitha Ohm College of Education,தூத்துக்குடி
E)Institute of Education,திருச்சி ஆகிய ஐந்து கல்லூரிகளுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டதாக பல்கலைக்கழகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இக்கல்லூரிகளுக்கு இடையிலான பயணத் தூரம் சுமார் 560 கி.மீ. இருக்க்கிறது. பயண நேரம் சுமார் 11மணி நேரம் ஆகும் நிலையில் ஒரே நாளில் ஆய்வு எப்படி சாத்தியம்?.
இது போன்று 27 நபர்கள் ஒரே நாளில் 2 முதல் 5 கல்லூரிகள் வரை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மொத்தமாக 64 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேலும், ஒரே பெயர் மற்றும் பெயரின் முதல் எழுத்துகளைக் கொண்ட 37 பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் அங்கீகரித்த பேராசிரியர் பட்டியலில் 222 இடங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இவைகள் போலி பேராசிரியர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போன்று 5 பேராசிரியர்களை, 10 கல்லூரிகளில் முதல்வராக அதாவது, ஒரு பேராசிரியரை, ஒரே நேரத்தில் இரு கல்லூரிகளில், கல்லூரி முதல்வராக அங்கீகாரம் செய்துள்ளனர்.
இந்த மோசடிகளின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டநடவடிக்கை மேற்கொள்ள கோரி இன்றைய தினம் அறப்போர் இயக்கம், உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய், ஆளுநர் திரு.இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உயர்கல்வித்துறை அமைச்சர்,திரு.P.விஸ்வநாதன், செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., திரு. பேராசிரியர் பங்கஜ் அரோரா - Chairman, NCTE, Delhi மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளது.