ஆசைக்கு அளவில்லை... ஆயுளுக்கு உத்திரவாதமில்லை! The Hourglass of Life.🌟 Luke 12: 13-21🕯️ Fr A Thomas
TNcatholic
0:00 / 0:00
ஆசைக்கு அளவில்லை... ஆயுளுக்கு உத்திரவாதமில்லை! The Hourglass of Life.🌟 Luke 12: 13-21🕯️ Fr A Thomas
95 просмотров · 1 день назад
TNcatholic
9,9 тыс. подписчиков
95 просмотров · 1 день назад
❋ Rich in Pocket, Poor in Soul?
✨ What Makes Us Truly Rich? ✨
Today’s Reflection on Luke 12:13–21
A man's life does not consist in the abundance of his possessions.
'பேராசை' என்னும் பெரும் பிணிக்கு மருந்தென்ன?
மிகுதியான உடைமைகளில் இல்லை உயிருள்ள வாழ்வு!
🌿 1. "நான்" என்னும் சுயநலச் சிறை | The Prison of "I" & "My"
"என்" நிலம், "என்" களஞ்சியம்,
"என்" தானியம், "என்" நெஞ்சம்...
'நான்' என்ற அகந்தையில் உழன்றான் செல்வந்தன்!
ஆசிர்வதித்தவன் ஆண்டவன் என்பதை மறந்தான்,
அயலான் முகத்தைத் தன் சிந்தையில் தொலைத்தான்.
கடவுள் கொடுத்ததை நமக்காக மட்டுமே பதுக்குவது
ஆன்மீகக் குருட்டுத்தனம் அல்லவா?
🍂 2. ஆன்மாவின் பசி தீர்க்குமா செல்வம்? | Wealth Cannot Feed the Soul
உடல் பசிக்கு உணவாகும் தானியம்,
உயிர் பசிக்கு உதவுமா நாணயம்?
வங்கி இருப்பும், வையகத்துச் சொத்தும்,
ஆன்மாவுக்குத் தருமா விடுதலையை?
தன் வாழ்க்கைக்குத் தானே எஜமான் என,
எவரும் இங்கு உரிமை கோர இயலாதே!
⏳ 3. காலத்தின் மீதான போலி அதிகாரம் | The Illusion of Time
"பல ஆண்டுகளுக்கு..." எனப் பகல் கனவு கண்டான்!
நாளை நடப்பதை,
தன் கையில் உள்ளதாய் நினைத்தான்.
காலத்தை அளக்கும் மனிதனின் மாபெரும் அறியாமை இது!
"இன்றைக்கோ நாளைக்கோ கொல்லும் சாவு
இங்கேயா எங்கேயோ நாமறியோம்
உன்னையோ என்னையோ கொல்லும் சாவு."
— சந்தியாகப்பர் சுவாமிகள்.
👑 4. இறைவன் பார்வையில்: செல்வந்தனா? அறிவிலியா? | Rich or a Fool?
உலகப் பார்வையில் உயர்ந்தவனாய் இருக்கலாம்,
ஏழையைக் காணாவிட்டால்,
கடவுளின் பார்வையில் நீயும் ஓர் 'அறிவிலி' (Fool) தான்!
தேவையிலிருப்போருக்கு உதவத் தயாரா நாம்?
ஒரு புன்னகை, ஓர் ஆறுதல் வார்த்தை,
பசித்தோர்க்குப் பகிரும் சிறு உணவு...
இதுவன்றோ பரலோகத்தில் நமக்கான செல்வம்!
🕊️ முடிவுரைச் சிந்தனை: The True Treasure
நம் திறமை, நேரம், செல்வம் யாவும்,
இறைவன் நமக்களித்த இரவல்கள்!
அவற்றை நமக்காகவே முடக்கி வைக்காமல்,
பிறர் வாழ்வை மலரப் பயன்படுத்துவதே,
கடவுள் முன்னிலையில் நாம் செல்வந்தராவதற்கான வழி.
எமது வாழ்வின் நோக்கம் உலகப் பொருட்களைக் குவிப்பது அல்ல;
மாறாக, இறைவனின் அன்பைக் குவிப்பதே! ❤️
May we learn to treasure what has eternal value and become rich in the things that matter before God.
#TamilCatholic #TreasureInHeaven #GodsGrace #FaithOverPossessions #LiveWithPurpose #TheWordTodayTV
▶️This Channel :
/ @tncatholic
வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள்
-updated daily before 7AM IST morning
Rev.Fr.A Thomas, Puducherry
☎ 09443958472