இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானை..
Chendur Tv
0:00 / 0:00
இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானை..
81 044 просмотра · 1 год назад
Chendur Tv
7,11 тыс. подписчиков
81 044 просмотра · 1 год назад
#tiruchendur #tiruchendurtemple #elephant #thiruchendur #திருச்செந்தூர் #முருகன் #யானை #தெய்வானை
சோறு சாப்பிட்டியா என்றதும் தலையாட்டிய திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை
----------------------
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மூன்று தினங்களுக்கு பின் இன்று குளிக்க வைக்கப்பட்டது. இயல்பாக உணவுகளையும் உண்டது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த கோவிலில் தெய்வானை என்ற 26 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18 ஆம் தேதி இந்த யானை மிதித்து யானை பாகன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் யானை கால்நடை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் தெய்வானை யானை மூன்று தினங்களுக்கு பிறகு இன்று கட்டப்பட்டுள்ள இடத்தில் குளிப்பாட்டப்பட்டது.
அப்போது யானை தனது தும்பிக்கையால் உற்சாகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தது.
அதை தொடர்ந்து யானைக்கு உணவு நவதானியம், புற்கள், பழங்கள் வழங்கப்பட்டது. அதையும் சாப்பிட்டது.
தொடர்ந்து யானை உணவு முடித்த பின் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது யானையே பார்த்து மருத்துவர் ஒருவர் நன்றாக சாப்பிட்டாயா என்று கேட்டார். அதற்கு தெய்வானை யானை உற்சாகமாக தலை ஆட்டியது.
இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாகனை பிரிந்து மூன்று தினங்களாக சோகத்தில் காணப்பட்ட கோவிலான தெய்வானை தற்போது பழைய முறையிலேயே உணவு அருந்துவது மகிழ்ச்சியாக காணப்பட்டது.