Перейти к содержимому

🇱🇰இலங்கைக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! நிசங்க,ஹசரங்க OUT | வியாஸ்காந்த் IN? அசலங்கவுக்கு நெருக்கடி!

Trending Sports தமிழ்

0:00 / 0:00

🇱🇰இலங்கைக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! நிசங்க,ஹசரங்க OUT | வியாஸ்காந்த் IN? அசலங்கவுக்கு நெருக்கடி!

3 352 просмотра · 1 день назад
Trending Sports தமிழ்
5,78 тыс. подписчиков
3 352 просмотра · 1 день назад
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள்! 🇱🇰🏏 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கு முன்னதாக இலங்கை அணியின் முக்கிய வீரர்களான பத்தும் நிசங்க மற்றும் வனிந்து ஹசரங்க காயம் காரணமாக விலகியுள்ளனர். ஹசரங்கவுக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சரித் அசலங்கவின் மோசமான துடுப்பாட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குசல் மெண்டிஸ் மீண்டும் அணித்தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதற்கிடையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் இலங்கை அணி வெறும் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த அதிர்ச்சியும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நேற்று நடைபெற்ற ILT20 வீரர்கள் ஏலத்தில் வனிந்து ஹசரங்கவுக்கு எந்தவொரு அணியுடனும் ஒப்பந்தம் கிடைக்காத தகவலும் பேசுபொருளாகியுள்ளது. இந்த மாற்றங்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை அணியால் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியுமா? இந்த முழுமையான கிரிக்கெட் செய்தி அலசலில் பார்ப்போம். 📌 இந்த காணொளியில்: பத்தும் நிசங்கவின் காயம் மற்றும் விலகல் வனிந்து ஹசரங்கவின் காயம் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு அணியில் வாய்ப்பு? சரித் அசலங்கவின் அண்மைக்கால மோசமான ஆட்டம் குசல் மெண்டிஸ் மீண்டும் அணித்தலைவர் ஆசிய விளையாட்டில் 45 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை ILT20 ஏலத்தில் விலைபோகாத ஹசரங்க பாகிஸ்தான் T20 தொடருக்கான இலங்கை அணியின் சவால்கள் கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். காணொளியை LIKE செய்து உங்கள் கருத்துக்களையும் COMMENT பகுதியில் பதிவு செய்யுங்கள். #SriLankaCricket #SLvsPAK #PathumNissanka #WaninduHasaranga #VijayakanthViyaskanth #KusalMendis #CharithAsalanka #AsianGames2026 #ILT20 #SriLankaCricketNews #TamilCricketNews #CricketTamil #PakistanT20Series #CricketNews #TrendingSportsTamil