Skills - எப்படிப் பயன்படுத்துவது? | Claude Cowork – Workshop – Part 2
Sapien Geno
0:00 / 0:00
Skills - எப்படிப் பயன்படுத்துவது? | Claude Cowork – Workshop – Part 2
42 057 просмотров · 3 недели назад
Sapien Geno
7,78 тыс. подписчиков
42 057 просмотров · 3 недели назад
AI-யிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்லும்போது, ஒவ்வொரு முறையும் ஒரே வழிமுறைகளை மீண்டும் மீண்டும் விளக்குகிறீர்களா? நீங்கள் விரும்பும் முறையில் வேலைகளைச் செய்ய Skills எப்படி உதவும்?
Claude Cowork பயிலரங்கத்தின் இந்த இரண்டாம் பகுதியில், Skills என்றால் என்ன, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். தொழில்நுட்பப் பின்னணி இல்லாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், AI-க்கு ஒரு வேலையைச் செய்வதற்கான வழிமுறைகளை வழங்குவதிலும், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதிலும் Skills-ன் பங்கைப் பார்க்கலாம்.
ஒரே பாணியில் உள்ளடக்கம் எழுதுவது, குறிப்பிட்ட வடிவத்தில் அறிக்கைகளைத் தயாரிப்பது, அடிக்கடி செய்யும் வேலைகளை ஒழுங்குபடுத்துவது போன்ற தேவைகளில் Skills எப்படி உதவக்கூடும்? நமது வேலைக்கு ஏற்ற Skill-ஐ எப்படிப் பயன்படுத்துவது? கிடைக்கும் முடிவுகளைச் சரிபார்த்து, தேவைக்கேற்ப வழிமுறைகளை மேம்படுத்துவது எப்படி? இவற்றைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதி உதவும்.
AI-ஐ அன்றாட வேலைகளில் இன்னும் பயனுள்ளதாகப் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள், பணியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்குமான பயிலரங்கம் இது.
எங்களின் புதிய வீடியோக்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அறிய Sapien Geno-வைப் பின்தொடருங்கள்:
பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/profile.php?...
வாட்ஸ்அப் சேனல்: https://www.whatsapp.com/channel/0029...
இந்த வீடியோ, இரண்டரை மணி நேரம் நடைபெற்ற எங்கள் முழுப் பயிலரங்கின் ஒரு பகுதி. இது பல பகுதிகளாக, அனைவருக்கும் இலவசமாக வெளியிடப்படுகிறது. 2 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அண்ணா AI கிளப் மற்றும் Sapien Geno இணைந்து இந்தப் பயிலரங்கை நடத்தின.
பேசப்பட்ட தலைப்புகள்: Claude Cowork – ஒரு செய்முறை விளக்கம்; சுயதொழில் மற்றும் சிறுதொழில் புரிவோருக்கான செயற்கை நுண்ணறிவு – கலந்துரையாடல்.
Follow Sapien Geno for new episodes and updates:
Facebook page: https://www.facebook.com/profile.php?...
WhatsApp channel: https://www.whatsapp.com/channel/0029...
This video is part of our full 2.5-hour workshop, released as multiple episodes, free for everyone. The workshop was jointly organised by Anna AI Club and Sapien Geno at the Anna Centenary Library, Kotturpuram, Chennai, on Sunday, 2 August 2026.
Topics covered: Claude Cowork, a practical demonstration; and AI for the self-employed and small business owners, a discussion.