பாமாலை 403 : பரமண்டலதிலுள்ள
R D Durai Selvakumar
0:00 / 0:00
பாமாலை 403 : பரமண்டலதிலுள்ள
24 просмотра · 2 дня назад
R D Durai Selvakumar
445 подписчиков
24 просмотра · 2 дня назад
பாமாலை 403 : பரமண்டலதிலுள்ள
Tune : Bavarian 155
Major : F
1 பரமண்டலத்தில் உள்ள
மகிமை என் ரம்மியம்;
இயேசு என்கிற அன்புள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்;
பரலோக நன்மைகள்
என்னுடைய ஆறுதல்.
2 வேறே பேர் மண்ணாஸ்தியாலே
தங்களைத் தேற்றட்டுமேன்;
நான் என் நெஞ்சை இயேசுவாலே
தேற்றி விண்ணை நோக்குவேன்;
மண் அழியும், இயேசுவோ
என்றும் நிற்கிறார் அல்லோ.
3 எனக்கவரில் மிகுந்த
ஆஸ்தி அகப்பட்டது;
விக்கினங்களால் சூழுண்ட
லோக ஆஸ்தி எதுக்கு?
இயேசுதான் என் ஆத்துமம்
தேடிய நற்பொக்கிஷம்.
4 லோக இன்பத்தை ருசிக்கும்
நூறு வருஷத்திலும்,
இயேசுவோடு சஞ்சரிக்கும்
ஒரு நாளே இங்கேயும்
மேன்மையே; அங்கவரை
சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!
5 எனக்கு மோட்சானந்தத்தில்
பங்குண்டாக, இயேசுவே,
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
எனக்குத் துணையாமே;
ஆ, நான் இன்றும் என்றைக்கும்
உம்முடன் இருக்கவும்.