குருநாதா | Gurunaadhaa | Swamimalai Murugan Song | ஆறுபடை வீடு
சிவாய் இசை · SIVAAI ISAI
0:00 / 0:00
குருநாதா | Gurunaadhaa | Swamimalai Murugan Song | ஆறுபடை வீடு
185 просмотров · 2 недели назад
சிவாய் இசை · SIVAAI ISAI
12 подписчиков
185 просмотров · 2 недели назад
தந்தைக்கே பாடம் சொன்ன தளிர் வயது ஆசான். சுவாமிமலையில் முருகன் மகன் அல்ல — அவனே குரு.
The boy who taught his own father. At Swamimalai, Murugan is not the son — he is the teacher, and Shiva is the one listening.
குருநாதா — சுவாமிமலை — from the album ஆறுபடை வீடு (Aarupadai Veedu). An Anthem to Arumugam. Seven songs for the six abodes of Murugan.
━━━━━━━━━━━━━
LYRICS · வரிகள்
━━━━━━━━━━━━━
அரோஹரா... அரோஹரா...
ஹரோ ஹரா... ஹரோ ஹரா...
மொழி தெரியாத நாவுக்கு மொழி கொடுத்த குருநாதா
வழி தெரியாத நெஞ்சுக்கு வேல் கொடுத்த குருநாதா
விழி மூடி நான் நின்றாலும் வெளிச்சம் தந்த குருநாதா
விழுந்த இடமெல்லாம் கை நீட்டி எழுப்பி விட்ட குருநாதா
ஓம் என்ற எழுத்தின் பொருளை உன் தந்தைக்கே சொன்னவனே
சுவாமிமலை சிறுவனே என் சுவாசம் நீயே குருநாதா- அரோஹரா!
என் ஆசான் நீயே முருகா ! அரோஹரா!
கேட்க ஒரு ஆளும் இல்லை கேள்வி மட்டும் ஆயிரம்
காட்ட ஒரு ஆளும் இல்லை காயம் மட்டும் ஆயிரம்
நாட்டம் எல்லாம் அழிந்து போக நானும் என்னைத் தொலைத்தேனே
ஓட்டம் இல்லம் ஒளிந்து போய், உன் வேல் ஒன்று மின்னியதே
கண்ணசைவில் சொன்ன பாடம் காலமெல்லாம் மறக்கவில்லை
எண்ணமெல்லாம் நீ நிறைந்தாய் எழுத ஒன்றும் மிச்சமில்லை
உண்மை என்ன என்று கேட்டேன் உதடு ஒன்றும் அசையவில்லை
விண்ணும் மண்ணும் அமைதியானது, வேறு பதில் தேவையில்லை
மாற ஒன்றும் இல்லை வெளியே, மாற்றம் தேவை உள்ளே தான்
ஏற்றம் கொடுக்கும் ஒற்றை வார்த்தை ஓம் என்னும் மந்திரம் தான்
தோற்றுப் போன கண்கள் இரண்டும் ஒளியைக்காண செய்தவனே
சீற்றம் கொண்ட மயிலைப்போல சிறகடிக்க செய்தவனே
அங்கம் எங்கும் இருள் அகற்ற ஆறுமுகமாய் எழுந்து வந்தாய்
தங்க இடம் இல்லையென உனக்குள் எனக்கிடம் தந்தாய்
பொங்கும் ஆணவச் சூரன் ஒருவன் புகுந்திருந்தான் என்னுள்ளே
சங்கு முழங்க கூர்வேல் இறங்க சாம்பலானான் என்னுள்ளே
எங்க இருக்கிறாய் என்று கேட்டேன், என் நெஞ்சை தொட்டு காட்டினாய்
எப்படி வெல்வது என்றுக்கேட்டேன் என்னையே வெல்லச்சொன்னாய் !
வேலும் மயிலும் துணை! அரோஹரா!
வெற்றி என்பது உன் பெயர்! அரோஹரா!
குரு என்றால் முருகன்! முருகன் என்றால் குரு!
ஹரோ ஹரா! ஹரோ ஹரா!
குருநாதா... குருநாதா... குருநாதா...
━━━━━━━━━━━━━
MEANING
━━━━━━━━━━━━━
CHORUS — To a tongue that knew no language, you gave language. To a heart that knew no path, you gave the Vel. Even with my eyes shut, you stood as light. Everywhere I fell, you reached down and lifted me.
ANUPALLAVI — You who whispered the mantra into your own father's ear, teacher of tender years. Boy of Swamimalai who lights a flame in my mind. You who sound as Om inside my breathing. Salutations — you alone are my teacher.
VERSE 1 — No one to ask, only a thousand questions. Longing became an ocean and there was no other way. When every ambition died, I lost myself along with it. All my running stopped the second your Vel flashed.
VERSE 2 — The lesson you gave with a flick of your eye, I have never forgotten. You filled every thought; nothing was left to write. I asked what truth is — you shut your lips and stood there smiling. A whiteness bloomed inside me. No other answer was needed.
VERSE 3 — Nothing changed outside; all the change happened within. One lifting word made me look at myself. Two defeated eyes learned to see light. A peacock full of fury spread its wings and rose.
VERSE 4 — Darkness filled every limb; you spread your six faces. I said I had nowhere to rest; you put your hand on my head. A demon of swelling arrogance had got inside my heart. The conch rang, the Vel came down, and he was ash in a second.
BRIDGE — "The Vel is not a weapon," you said, "it is knowledge that has taken root." "Feet are not for walking," you said, "they are for falling."
━━━━━━━━━━━━━
ABOUT THIS SONG
━━━━━━━━━━━━━
Swamimalai is the only one of the six abodes where Murugan is the guru and not the child. Brahma could not explain the meaning of Om, so the boy imprisoned him — and then Shiva himself asked his son to explain it, and sat and listened. The father became the student. That is the whole story.
So the song never asks for anything. It only lists what was already given: language to a tongue that had none, a path to a heart that had none, a hand every time the singer fell.
And the best line is spoken, not sung. கால் என்பது நடப்பதற்கு அல்ல விழுவதற்கு — feet are not for walking, they are for falling. At a guru's feet.
━━━━━━━━━━━━━
CREDITS
━━━━━━━━━━━━━
Words, direction: Siva
Vocals, instrumentation, production: AI
அரோஹரா, ஹரோ ஹரா and வேலும் மயிலும் துணை are traditional and public domain
━━━━━━━━━━━━━
ஆறுபடை வீடு — THE ALBUM
━━━━━━━━━━━━━
0. அரோஹரா — ஆறுபடை அந்தம்
1. கல்யாணமாம் கல்யாணம் — திருப்பரங்குன்றம்
2. செந்தூர் வேல் கவசம் — திருச்செந்தூர்
3. பழநி ஆண்டி — பழநி
4. குருநாதா — சுவாமிமலை
5. தணிகைமலை வீரன் — திருத்தணி
6. சுட்ட பழம் — பழமுதிர்ச்சோலை
Playlist: • ஆறுபடை வீடு | Aarupadai Veedu — An Anthem ...
சிவாய நம
#Murugan #ஆறுபடைவீடு #குருநாதா #சுவாமிமலை #Swamimalai #Gurunatha #TamilDevotional #Kandhan #Vel #AarupadaiVeedu #Guru