குலசை காப்பு அணிந்ததால் அடி | கிறிஸ்தவப் பள்ளியின் அராஜகம் | சிக்கிய பிரின்ஸ்பால் | Amala Convent
Shree TV
0:00 / 0:00
குலசை காப்பு அணிந்ததால் அடி | கிறிஸ்தவப் பள்ளியின் அராஜகம் | சிக்கிய பிரின்ஸ்பால் | Amala Convent
44 804 просмотра · 1 дн. назад
Shree TV
354 тыс. подписчиков
44 804 просмотра · 1 дн. назад
கன்னியாகுமரி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாலையணிந்து பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவியிடம், மாலையை மறைத்து அணியுமாறு கூறி தலைமை ஆசிரியை தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கண்ணனின் 15 வயது மகள், தக்கலையில் உள்ள அமலா கான்வென்ட் தனியார் மகளிர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாணவி மாலையணிந்து காப்பு கட்டிய நிலையில் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, மாலையை மறைத்து அணியுமாறு தலைமை ஆசிரியை கூறியதுடன், தன்னைத் தாக்கியதாகவும் மாணவி தனது தந்தையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, உறவினர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ஆறுமுகம், பாஜக மாவட்டப் பொதுச்செயலாளர் பா. ரமேஷ் உள்ளிட்ட இந்து அமைப்பினருடன் பள்ளிக்குச் சென்றார். அங்கு தலைமை ஆசிரியை அறையை முற்றுகையிட்டு, சம்பவம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த தக்கலை காவல்துறையினர் பள்ளிக்கு வந்து, மாணவியிடமும் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே, மாணவி சரியாகப் பள்ளிக்கு வராத காரணத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தசரா விரதத்திற்காக அணிந்திருந்த மாலையை மறைக்கச் சொன்னதுடன், காப்பைக் கழற்றுமாறும் வலியுறுத்தப்பட்டதாக மாணவி தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.
இதையடுத்து, மாணவியின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து உறவினர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தினர். பின்னர், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதியளிக்கப்பட்டதுடன், நடந்த சம்பவத்திற்காக வருத்தமும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பள்ளியில் கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். மாணவியிடம் தலைமை ஆசிரியை நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்களும் இந்து அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
#Kanyakumari #KumariNews #Thuckalay #Kollanvilai #AmalaConvent #SchoolControversy #StudentIssue #DasaraFestival #Kulasekarapattinam #MutharammanTemple #DasaraMala #MalaAninthaStudent #HinduTradition #ReligiousPractice #HinduMunnani #BJP #Arumugam #PARamesh #ParentsComplaint #SchoolNews #PoliceInvestigation #TamilNaduNews #TamilNews #BreakingNews #NewsUpdate #TamilShorts #ShreeTV #ShreeTVNews
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
To Subscribe Shree TV's YouTube Channel click now at / @shreetv and stay updated🔔
To Follow Shree TV's WhatsApp Channel, click now at https://whatsapp.com/channel/0029VaAZ...
Shree TV's other social media platforms:
➡️ Visit: https://shreetamizh.com
➡️ Like us on Facebook: / shreetv
➡️ Follow us on Twitter: https://x.com/Shreetv_media
➡️ Follow us on Instagram: / shreetvmedia