225-முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே காற்றின் வேகம் காலிலே மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி வேதனை உ
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
0:00 / 0:00
225-முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே காற்றின் வேகம் காலிலே மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி வேதனை உ
383 просмотра · 9 дней назад
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
463 подписчика
383 просмотра · 9 дней назад
225-1:முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே
காற்றின் வேகம் காலிலே
மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி
வேதனை உடைத்து நீயும் தாண்டு
முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே
காற்றின் வேகம் காலிலே
மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி
வேதனை உடைத்து நீயும் தாண்டு
உலகில் உந்தன் புன்னகை வேண்டும்
பூக்கள் எல்லாம் உன்னடி வேண்டும்
உன்னை மிதித்தவன் நெஞ்சில் மிதித்து
நிமிர்ந்து வாடா தமிழா வாடா
உலகில் உந்தன் புன்னகை வேண்டும்
பூக்கள் எல்லாம் உன்னடி வேண்டும்
உன்னை மிதித்தவன் நெஞ்சில் மிதித்து
நிமிர்ந்து வாடா தமிழால் வாடா
ஓடி வாடா ஓடி வாடா
இடிபோல் நீயும் வாடா...
முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே
காற்றின் வேகம் காலிலே
மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி
வேதனை உடைத்து நீயும் தாண்டு
2:கைகள் கோர்த்து சேர்ந்து வாடா
கண்கள் சிவக்க நிமிர்ந்து வாடா
உலகம் உந்தன் கையில் தாண்டா
உன்னை விட்டால் யார் தான் சொல்லு
கைகள் கோர்த்து சேர்ந்து வாடா
கண்கள் சிவக்க நிமிர்ந்து வாடா
உலகம் உந்தன் கையில் தாண்டா
உன்னை விட்டால் யார் தான் சொல்லு
கூட இருந்து குழிகள் பறிப்பான்
கொஞ்சித் தானே நஞ்சு தெளிப்பான்
எதையும் கண்டு கலங்கா வாடா
ஏற்றத் தாழ்வு இல்லை தாண்டா
கூட இருந்து குழிகள் பறிப்பான்
கொஞ்சித் தானே நஞ்சு தெளிப்பான்
எதையும் கண்டு கலங்கா வாடா
ஏற்றத் தாழ்வு இல்லை தாண்டா
வாடா வாடா எழுந்து வாடா
முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே
காற்றின் வேகம் காலிலே
மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி
வேதனை உடைத்து நீயும் தாண்டு
3:உந்தன் கையில் உலகம் உருளும்
உண்மை கண்டு விழிகள் பிதுங்கும்
நரிகள் எல்லாம் சிதறி ஓடும்
நாகப் பாம்பாய் சீறி வாடா
உந்தன் கையில் உலகம் உருளும்
உண்மை கண்டு விழிகள் பிதுங்கும்
நரிகள் எல்லாம் சிதறி ஓடும்
நாகப் பாம்பாய் சீறி வாடா
சாதி பெயரால் கிழிக்கும் கூட்டம்
பொடிபடட்டும் உந்தன் கையால்
பொத்திப் போன வாய்கள் பேசும்
புன்னகை மீண்டும் புதிதாய்ப் பூக்கும்
சாதி பெயரால் கிழிக்கும் கூட்டம்
பொடிபடட்டும் உந்தன் கையால்
பொத்திப் போன வாய்கள் பேசும்
புன்னகை மீண்டும் புதிதாய்ப் பூக்கும்
வாடா வாடா வாடா வாடா
நீயும் வாடா வாடா வாடா வாடா
முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே
காற்றின் வேகம் காலிலே
மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி
வேதனை உடைத்து நீயும் தாண்டு
முட்டி மோதி சாதி வெறியன் காட்டிலே
காற்றின் வேகம் காலிலே
மிருகக் கூண்டின் வேலிகள் தாண்டி
வேதனை உடைத்து நீயும் தாண்டு
(கவிஞர் இராஜேந்திரகுமார் )