அகத்தியர் ஞானப் பாடல்கள்
மெய்ப்பொருள் பிரணவ இரகசிய திருக்கோவில்
0:00 / 0:00
அகத்தியர் ஞானப் பாடல்கள்
38 684 просмотра · 6 лет назад
மெய்ப்பொருள் பிரணவ இரகசிய திருக்கோவில்
28,6 тыс. подписчиков
38 684 просмотра · 6 лет назад
அகத்தியர் சித்தர்,
தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன. இவர் முருகப் பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றவர். இவரைக் கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ் முனி, குட முனி என்று பல பெயர்களால் சிறப்பித்துக் கூறுவர். அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் புலஸ்தியர், தேரையர், தொல்காப்பியர் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர் இவருடைய மாணவர்களில் ஒருவர் என்றும் கூறுவார்கள்.
அகத்தியரிடம் இருந்தே ஒரு சித்தர் மரபு தொடங்கியது எனலாம். அகத்தியர் மருத்துவம், ஞானம், நாடி சாஸ்திரம், சோதிடம், யோகம், மந்திரம் போன்ற பல துறைகளில் பல நூல்களைப் படைத்துள்ளார் என்பர்.
அகத்தியர் பரிபூரணம்
ஞான காவியம்
வாத காவியம் 1000
வைத்திய காவியம் 1500
என்பன போன்ற பல நூல்கள் இவர் பெயரில் கிடைக்கின்றன. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
சிவ சிவ
சிவாயநம🙏