Перейти к содержимому

Karuppasamy vinayagapuram||sethiya thope|| 26years aadi peruvizha||famous temple Tamil Nadu||10008

MANVASANAI

0:00 / 0:00

Karuppasamy vinayagapuram||sethiya thope|| 26years aadi peruvizha||famous temple Tamil Nadu||10008

54 просмотра · 2 недели назад
MANVASANAI
79 подписчиков
54 просмотра · 2 недели назад
சேத்தியாத்தோப்பு அருகே கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசை பெருவிழா 10,008 பால்குட ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு கழுகு பார்வை காட்சிகள் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் 26-ஆம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி கொடியேற்றம், வெள்ளாற்றங்கரையிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் ஸ்ரீ அங்காளம்மன் வீதி உலா மற்றும் திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற்றன. சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியிலிருந்து தொடங்கிய 10,008 பால்குட ஊர்வலத்தை, கோவில் பூசாரி ஆறுமுக சாமி மகா தீபாராதனை காட்டி தொடங்கி வைத்தார். மங்கள வாத்தியங்கள் மற்றும் கருப்பசாமிக்கான பொக்கிஷப் பெட்டியுடன் சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், வறட்சி நீங்கவும் வேண்டி மூலவர் கருப்பசாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.