சிக்கன் புலாவ் | Chicken Pulao In Tamil | One Pot Meal | Sunday Special Chicken Recipe
HomeCooking Tamil
0:00 / 0:00
சிக்கன் புலாவ் | Chicken Pulao In Tamil | One Pot Meal | Sunday Special Chicken Recipe
43 991 просмотр · 8 месяцев назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
43 991 просмотр · 8 месяцев назад
சிக்கன் புலாவ் | Chicken Pulao Recipe In Tamil | Family Lunch Special
#ChickenPulao #LunchSpecial #chickenrecipes #onepotmealrecipe
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Pulao: • Chicken Pulao Recipe | Simple Pressure Coo...
Our Other Recipes
வெள்ளை சிக்கன் குருமா: • வெள்ளை சிக்கன் குருமா | Authentic White Ch...
சிக்கன் ஸ்ட்யு: • சிக்கன் ஸ்ட்யு | Chicken Stew Recipe in Ta...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...
சிக்கன் புலாவ்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 500 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசிப்பூ, ஜாவித்ரி
கல்பாசி, பிரியாணி இலை
வெங்காயம் - 3 நறுக்கியது
பச்சை மிளகாய் - 6 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
தண்ணீர் - 1 கப் (250 மி.லி கப்)
Method
இந்த ரெசிபிக்காக அரை கிலோ எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முதலில் சிக்கனை மரினேட் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் தனியாத்தூள் மற்றும் ஒரு கப் நன்றாக அடித்த க்ரீமியான தயிர் சேர்த்து அனைத்தையும் சிக்கனில் நன்றாக படரும் வரை கலக்குங்கள். இதை சுமார் பதினைந்து நிமிடம் ஊற விடுங்கள்.
இப்போது ஒரு பிரஷர் குக்கரில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்குங்கள். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஜாதிப்பத்திரி, கல்பாசி மற்றும் பிரியாணி இலை சேர்த்து லேசாக வறுக்கவும். பின்னர் நீளமாக நறுக்கிய மூன்று வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள். அதற்கு பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கி சுமார் பத்து நிமிடம் வேகவிடுங்கள். அதன் பிறகு கரம் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து கலக்கவும்.
இப்போது அரை கிலோ பாஸ்மதி அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து வடித்து சிக்கனுடன் சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து சுவை பார்த்து தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி குறைந்த தீயில் சுமார் ஐந்து நிமிடம் வேகவைத்து, பின்னர் அடுப்பை அணைத்து பத்து நிமிடம் டம் விடுங்கள்.
பின்னர் திறந்தால் மணமும் சுவையும் நிறைந்த சிக்கன் புலாவ் தயார்.
You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Follow us :
Facebook: / homecookingtamil
Youtube: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com