Перейти к содержимому

திருவாரூர்(திருஆருர்) | திருவாதிரை பதிகம் | முத்து விதானம் மணிப்பொன் கவரி | திருநாவுக்கரசர் தேவாரம்

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருவாரூர்(திருஆருர்) | திருவாதிரை பதிகம் | முத்து விதானம் மணிப்பொன் கவரி | திருநாவுக்கரசர் தேவாரம்

1 556 просмотров · 9 месяцев назад
Shaivamum Thamizhum
3,48 тыс. подписчиков
1 556 просмотров · 9 месяцев назад
04.021 திருவாரூர்(திருஆருர்) | திருவாதிரைப் திருப்பதிகம் | முத்து விதானம் மணிப்பொன் கவரி முறையாலே | திருநாவுக்கரசர் தேவாரம் | #ShivamumThamizhum #ThiyagarajarTemple | #Thiruvarur | #Thirunavukarasar | #Thevaaram | #NalamTharumThirumuraiPathigam திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை திருமுறை : நான்காம் திருமுறை 021 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு. "ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன் பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன் போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே" —— (சம்பந்தர் தேவாரம் : 03.061.01) "ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய சோதியன் சொல்பொருளாய்ச் சுருங்கா மறை நான்கினையும் ஓதியன் உம்பர் தம்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே." —— (சுந்தரர் தேவாரம் : 01.097.01) என இப்படி ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்கள்.....! தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!. இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். 00:10 முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (01) 03:25 நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும் பிணி தான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (02) 03:54 வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளி தோன்றச் சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (03) 04:23 குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார் வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (04) 05:06 நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும் கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (05) 05:49 விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் தம் மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார் எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (06) 06:40 செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (07) 07:22 முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்லப் பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (08) 08:42 துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும் இன்பம் நும்மை ஏத்து நாள்கள் என்பாரும் நும்பின் எம்மை நுழையப் பணியேன் என்பாரும் அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (09) 09:59 பாரூர் பௌவத்தானை பத்தர் பணிந்தேத்தச் சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து ஓரூர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம். ..... (10) பொருளுரை : உலகினைச் சூழ்ந்து நிற்கும் கடலைப் போன்று எல்லை காண முடியாத இறைவனை, சிறப்பான பத்து குணங்களை உடைய அவனது அடியார்கள் பணிந்து வாழ்த்துவதால், சிறப்பான பாடல்களும் ஆடல்களும் நீங்காத பெருமையை உடைய ஆரூர் நகரத்தின் ஆதிரைத் திருவிழாவின் சிறப்பினை புகழ்ந்து பேசாத ஊர்களே உலகத்தில் இல்லை; இவ்வாறு ஆதிரைத் திருநாளின் சிறப்பு உலகத்தவர் அனைவரின் சிந்தையிலும் நிலைத்து காணப்படுகின்றது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"