தெளிவு பெறுவோம் வளமோடு வாழ்வோம் 11 10 2026 @SKYPROFMUTHU
Lifeat360 SKY Prof Muthu
0:00 / 0:00
தெளிவு பெறுவோம் வளமோடு வாழ்வோம் 11 10 2026 @SKYPROFMUTHU
307 просмотров · 2 дн. назад
Lifeat360 SKY Prof Muthu
8,93 тыс. подписчиков
307 просмотров · 2 дн. назад
தினசரி கடமைகளை செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு அவசர நிலை... நான் உதவ வேண்டி, என் கடமையை பாதியிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம். விழிப்புணர்வு வந்த பிறகு தான் என் கடமையை செய்யவில்லையே என்பது நினைவுக்கு வருகிறது. இதை எப்படி கையாள வேண்டும்?
When an emergency interrupts our duty, how can we balance helping others with fulfilling our own responsibilities?
கடமையை விட்டுவிட்டோமா? அவசர நிலையில் நம் கடமையை பாதியில் விட்டுவிட்டு உதவுவது சரிதானா?
விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்குக் காரணமா? இதற்கான தெளிவிருந்தால் நாம் எப்படிக் கையாள்வது என்பது தெரிந்துவிடும்.
நண்பர் சுப்புவின் மனைவி தொலைபேசியில் தன் கணவரிடம், தன்னை மருத்துவரிடம் மாலை அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டதற்கு... 'சரி, தயாராக இரு' எனச் சொல்கிறார்.
மாலையில் அவர் வீடு திரும்பும் போது, அருகில் ஒரு ஆட்டோக்காரன் ஒரு பையனை இடித்துத் தள்ள, இவர் உடனே அந்த பையனைத் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், தனது கடமையை, பதட்டத்தில் மறந்துவிட்டார்.
இதை எப்படி கையாண்டிருக்க வேண்டும்?
1) கடமையை மாற்றுவது வேறு, கடமையை மறப்பது வேறு.
உண்மையான அவசர நிலை ஏற்பட்டால், அந்த நேரத்தில் அந்த பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவுவது ஒரு புதிய முன்னுரிமை பெற்ற கடமையாக அங்கே மாறி இருக்கிறது;
இதுதான் சரியான அணுகுமுறை.
இந்த உதவியைச் செய்வது விழிப்புணர்வு இல்லாததால் அல்ல.
2) விழிப்புணர்வு என்பது எந்தச் சூழ்நிலையிலும் ஒரு வேலையை விட்டுவிடாமல் செய்வதும் அல்ல; 'என் கடமைதான் முக்கியம்' என நம்மைச் சுற்றி நடக்கும் துன்பத்தைப் பார்க்காமல் இருப்பதும் அல்ல.
சூழ்நிலைக்கேற்ப கடமையின் முன்னுரிமையை அறிந்து செயல்படுவதுதான் விழிப்புணர்வு.
விழிப்புணர்வு என்றால், தற்காலச் சூழ்நிலை என்ன என்பதையும், நமது கடந்த கால அனுபவத்தையும், எதிர்காலத்தில் என்ன செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் கணித்து, மூன்றையும் இணைத்து எதில் நன்மை அதிகமோ, துன்பம் குறைவோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நம்முடைய எண்ணம், சொல், செயலை பயன்படுத்துவது என்பது மகரிஷி அவர்களின் கருத்து.
3) நம்மால் உதவி செய்ய முடிந்தது என்பதில் மனம் மகிழ்ந்து, நாம் செய்து கொண்டிருந்தக் கடமையை முற்றிலும் மறந்து விடுவது கண்டிப்பாகத் தவறாகும்.
நண்பர் சுப்பு அந்த பையனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே தன் மனைவிக்கு, தொலைப்பேசியில் அழைத்து, 'இங்கே ஒரு அவசர நிலை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம். வருவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் தாமதம் ஆகலாம். கண்டிப்பாக வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்' எனத் தெரியப்படுத்த வேண்டும். தனது கடமையை மறவாமல் அதை எப்போது செய்ய வேண்டும் என்பதையும், நம் கடமையைப் பாதியிலேயே விட்டுவிட்டால் எவ்வளவு பாதிப்பு/துன்பம் ஏற்படும் என்பதையும் கணக்கிட்டுச் செயல்படுவதுதான் விழிப்புணர்வு.
எப்படிக் கையாள வேண்டும்?
தினசரி கடமைகளைச் செய்யும் போது தற்காலச் சூழ்நிலை என்ன? சுற்றி நடப்பது என்ன? ஏதேனும் அவசர நிலையா? யாருக்காவது என்னால் உதவ முடிந்தால் அவர்களுடைய பெரிய துன்பம் தடுக்கப்படுமா?
நான் அப்படி என் கடமையைப் பாதியிலேயே விட்டுவிடும் போது எவ்வளவு துன்பம் ஏற்படும்? இப்போது எதற்கு முன்னுரிமை தேவை என்பதைக் கணக்கிட்டு, கடமையின் முன்னுரிமையை அறிந்து செயல்படுவதும், செய்த பிறகு, பாதியில் விட்ட கடமையை மறக்காமல், அடுத்த கடமைக்குத் திரும்புவதே சரியான அணுகுமுறையாகும்.
நன்றி, வாழ்க வளமுடன்.