பவானி அம்மன் பாடல்கள் || பவானி அம்மன் மந்திரம் || bhavani amman songs tamil || பெரியபாளையம் பவானி
Subamasthu
0:00 / 0:00
பவானி அம்மன் பாடல்கள் || பவானி அம்மன் மந்திரம் || bhavani amman songs tamil || பெரியபாளையம் பவானி
7 769 просмотров · 4 года назад
Subamasthu
3,05 тыс. подписчиков
7 769 просмотров · 4 года назад
பவானி அம்மன் பாடல்கள் || பவானி அம்மன் மந்திரம் || bhavani amman songs tamil || பெரியபாளையம் பவானி
#பவானி அம்மன் பாடல்கள்
#bhavani amman songs tamil
#bhavani amman potri
#bhavani amman kovil
#bhavani amman kovil periyapalayam
#periyapalayam amman story in tamil
#periyapalayam amman songs
#periyapalayam bhavani amman songs
#periyapalayam bhavani amman padal
#பெரியபாளையம் பவானி அம்மன் பாடல்கள்
#பவானி அம்மன் மந்திரம்
#பவானி அம்மன் வரலாறு
#பவானி அம்மன் அஷ்டோத்திரம்
#பவானி அம்மன் கோவில்
#பவானி அம்மன் பாடல்
#பெரியபாளையம் பவானி அம்மன் பாடல்கள்
ஓம் அன்புருவாய் தாயே போற்றி
ஓம் அன்னை பவானி அருளே போற்றி
ஓம் அறிவும் திருவும் அளிப்பாய் போற்றி
ஓம் அடியார் துயர் துடைப்பாய் போற்றி
ஓம் ஆடிப் பெருவிழா கொள்வாய் போற்றி
ஓம் ஆடிப் பாடுவோர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி
ஓம் ஆதிபகவன் சக்தியே போற்றி
ஓம் ஆருயிர் காக்கும் அன்னையே போற்றி
ஓம் ஆண்டவன் பாதத் தமர்ந்தாய் போற்றி
ஓம் ஆதிமுதலான அன்னையே போற்றி
ஓம் ஆலிலை மைந்தன் தங்காய் போற்றி
ஓம் இரேணுகை யென்னும் பெயராய் போற்றி
ஓம் இன்னல் தவிர்க்கும் அன்னாய் போற்றி
ஓம் இளம்பிடி நடையாய் போற்றி போற்றி
ஓம் இன்பம் தரும் அன்பே போற்றி
ஓம் ஈசன் தேவி இணையடி போற்றி
ஓம் ஈடிலா முதலே இணையடி போற்றி
ஓம் உலகின் கண்ணாய் உறைவாய் போற்றி
ஓம் உயிர்களை ஓம்பும் ஓங்காரி போற்றி
ஓம் உண்ணாமுறையெம் உமையே போற்றி
ஓம் உம்பர் தலைவி உன்னடி போற்றி
ஓம் உரமும் உயர்வும் தருவாய் போற்றி
ஓம் ஊழிக்காலத்து உதித்தாய் போற்றி
ஓம் ஊழ்வினை போக்கும் உமையே போற்றி
ஓம் ஊரெல்லாம் நோய் போக உதித்தாய் போற்றி
ஓம் எங்கும் பரந்து இறைவியே போற்றி
ஓம் எண்ணியோர் உள்ளத்து இருப்பாய் போற்றி
ஓம் எழில்தரும் அழகுத் தாயே போற்றி
ஓம் எல்லாபுரத்து இறைவியே போற்றி
ஓம் எல்லோர் மனத்தும் இனித்திருப்பாய் போற்றி
ஓம் ஏலவார் குழலி இணையடி போற்றி
ஓம் ஏகநாயகி எழிலே போற்றி
ஓம் ஐயம் அகற்றும் அமுதே போற்றி
ஓம் ஐம்பெரும் பூதம் ஆனாய் போற்றி
ஓம் ஐந்தெழுத் தோதுவோர்கருள்வாய் போற்றி
ஓம் ஒருவன் திருவுளத் தொளிர்வாய் போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி
ஓம் ஓதும் மறையின் உயிரே போற்றி
ஓம் ஒளவியம் அகற்றும் அருளே போற்றி
ஓம் கல்வியளிக்கும் கடலே போற்றி
ஓம் கற்றவர்க் கின்பக் கடலே போற்றி
ஓம் காரார் குழலி கனியே போற்றி
ஓம் காலங் கடந்த கருவே போற்றி
ஓம் கிளைஞர் காக்கும் கிள்ளாய் போற்றி
ஓம் கீழோர் மேவ கிளர்ந்தெழுவாய் போற்றி
ஓம் சங்கு சக்கர முடையாய் போற்றி
ஓம் சந்ததி காக்கும் சற்குருவே போற்றி
ஓம் அங்கம் மறைத்து எங்கும் உறைவாய் போற்றி
ஓம் ஒளியாய் நின்ற உயர் தனித்தாயே போற்றி
ஓம் ஞாலம் படைத்த நாயகி போற்றி
ஓம் தரணிக்கெல்லாம் தாயே போற்றி
ஓம் தண்ணளி சுரக்கும் தாயே போற்றி
ஓம் நாரணன் தங்காய் நளினியே போற்றி
ஓம் பரசுராமனைப் பயன்றாய் போற்றி
ஓம் பாவம் போக்கிடும் பவானியே போற்றி
ஓம் நல்லன செய்யும் நாயகி போற்றி
ஓம் அல்லன போக்கும் அருளே போற்றி
ஓம் வல்வினை தீர்க்கும் வடிவே போற்றி
ஓம் பச்சை நிறத்து பைங்கிளி போற்றி
ஓம் பெருந்துறை வாழும் பிடியே போற்றி
ஓம் பவளவரை மேற்பைங்கொடி போற்றி
ஓம் நாற்பெரும் பயன்பெறும் நங்காய் போற்றி
ஓம் பத்ரகாளியே நின்பாதம் போற்றி
ஓம் பங்கயச் செல்வியே பார்வதி அருளே போற்றி
ஓம் பெரியபாளையத்து பேர் அருளே போற்றி
ஓம் அன்னை அபிராமி தாயே போற்றி
ஓம் அருந்தமிழ்ச் சிவகாமி தாயே போற்றி
ஓம் ஆற்றங்கரையில் அமர்ந்தாய் போற்றி
ஓம் துர்க்கா தேவியே போற்றி போற்றி
ஓம் தூயோர்க்கு வாழ்வளிப்பாய் போற்றி போற்றி
ஓம் புவனேஸ்வரியே போற்றி போற்றி
ஓம் புதுப்புனல் ஆனவளே போற்றி போற்றி
ஓம் திரிசூலி நாயகியே போற்றி போற்றி
ஓம் தீயோரைச் சாய்ப்பவளே போற்றி போற்றி
ஓம் குதிரைச் சேவகங் கொண்டாய் போற்றி
ஓம் குறை போக்கும் குவலயத் தாளே போற்றி
ஓம் சக்தியே சங்கரித் தாயே போற்றி
ஓம் புற்றினுள் தோன்றிய பொருளே போற்றி
ஓம் திருநிலை நின்ற தேவியே போற்றி
ஓம் வைணவ ரூபிணி வைதேகி போற்றி
ஓம் திருமால் சகோதரி திருவருள் போற்றி
ஓம் வேப்பிலை விரும்பும் வேணியே போற்றி
ஓம் வீரங் கொடுக்கும் தாயே போற்றி
ஓம் சூரிய சந்திரர் கண்ணாய் போற்றி
ஓம் சுமங்கலியான சுயம்புவே போற்றி
ஓம் மூவுலகந் தொழும் முதல்வியே போற்றி
ஓம் மூவா முதலே போற்றி போற்றி
ஓம் துட்டாரைத் தகர்க்கும் தூயவளே போற்றி
ஓம் நெஞ்சத்து வஞ்சகம் நீக்குவாய் போற்றி
ஓம் அஞ்சுவோர்க்குத் துணை ஆவாய் போற்றி
ஓம் நெஞ்சால் வஞ்சிப்போரை நீக்குவாய் போற்றி
ஓம் அடியார் மனங்குளிர அருள்தருவாய் போற்றி
ஓம் இல்லறத்தை இனிதாக்கும் தாயே போற்றி
ஓம் ஈவோர்க்கு வாழ்வளிக்கும் இறைவியே போற்றி
ஓம் போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
ஓம் ஆகமத் தொளிரும் அருளே போற்றி
ஓம் அண்டசரா சரங்களுக்கு அருள்வாய் போற்றி
ஓம் புண்டரீகத் துறை பூங்கொடியே போற்றி
ஓம் விண்ணும் மண்ணும்காப்பாய் போற்றி
ஓம் தொண்டர் துயரைத் துடைப்பாய் போற்றி
ஓம் அருமறை பொருளே போற்றி போற்றி
ஓம் பராசக்தியே போற்றி போற்றி
ஓம் பழி பாவம் போக்கும் பவானியே போற்றி
ஓம் பாராட்சி புரியும் பவானித்தாயே போற்றி
ஓம் பேர்கூறுவோர் பிணி நீக்குவாய் போற்றி
ஓம் பவானிதேவியே நின்பாதம் போற்றி
ஓம் போற்றி போற்றி உன் பொன்னடி போற்றி