Muthuppettai Dargah 2026 | பாலைவனத்தில் ஒரு ரோஜா 🌹மலர்ந்தது ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Hajith Ibrahim
0:00 / 0:00
Muthuppettai Dargah 2026 | பாலைவனத்தில் ஒரு ரோஜா 🌹மலர்ந்தது ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
5 212 просмотров · 4 дн. назад
Hajith Ibrahim
477 тыс. подписчиков
5 212 просмотров · 4 дн. назад
00:00 | TITLE CARD
01:02 | MUTHUPPETTAI DARGAH
01:32 | PALAIVANATHIL ORU ROJA SONG
--------------------------------------------------------------------------------------------------------------------
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
பயகம்பர் என்னும் ரோஜா
நம் நெஞ்சில் வாழும் ராஜா
பயகம்பர் என்னும் ரோஜா
நம் நெஞ்சில் வாழும் ராஜா
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
********************************************************************
ஸாயிர் H.அப்துர் ரஹீம் (கவிஞர் மதிதாசன்) அவர்கள் இயற்றிய பாடல்.இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது" என்ற பாடல் அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்களின் குரலில்.
***********************************************************************
LYRICS:
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
பயகம்பர் என்னும் ரோஜா
நம் நெஞ்சில் வாழும் ராஜா
பயகம்பர் என்னும் ரோஜா
நம் நெஞ்சில் வாழும் ராஜா
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது
இந்த பாருலகெங்கும் தீன் மணம் வீசுது
இருளை நீக்கிடும் நிலவை போலவே
எம்மான் நபி பிறந்தார்
அருள் பெருகவே அன்பு தழைக்கவே
ஆற்றல் நபி பிறந்தார்
வானோர் வாழ்த்திட வையகம் போற்றிட
வள்ளல் நபி பிறந்தார்
வானோர் வாழ்த்திட வையகம் போற்றிட
வள்ளல் நபி பிறந்தார்
நம் வள்ளல் நபி பிறந்தார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
நபிகள் கோமான் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
அன்னை ஆமினார் அப்துல்லா மகனாய்
அழகு மக்கா நகரில்
வண்ணம் மிகுந்த திங்கள் கிழமையில்
வாய்மை நபி பிறந்தார்
நிறைந்த எழிலாய் நேர்மையின் வடிவாய்
நாயகம் பிறந்தார்
நிறைந்த எழிலாய் நேர்மையின் வடிவாய்
நாயகம் பிறந்தார்
நபிகள் நாயகம் பிறந்தார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
நபிகள் கோமான் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
வாணிபம் செய்தார் வளமே கண்டார்
வாய்மை நிலை நாட்டினார்
நானிலம் போற்றும் நாயகியான
ஹதீஜாவை மணந்தார்
இறைவனை நினைந்து ஹீரா குகையில்
தினமும் தவம் செய்தார்
இறைவனை நினைந்து ஹீரா குகையில்
தினமும் தவம் செய்தார்
முறையாய் தினமும் தவம் செய்தார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
நபிகள் கோமான் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
வானவர் ஜிபுரில் இறைமறை தந்தார்
வளமாய் நபி ஏற்றார்
நானில மக்கள் நலமுடன் வாழ
நல்லுரைகள் ஆற்றினார்
பான்மை தவ்ஹீத் பயிர் வளர்க்க
பாங்காய் பணி செய்தார்
பான்மை தவ்ஹீத் பயிர் வளர்க்க
பாங்காய் பணி செய்தார்
நபிகள் பாங்காய் பணி செய்தார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
நபிகள் கோமான் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
இறைவன் ஆணையை இதமுடன் ஏற்று
இஸ்லாத்தை போதித்தார்
குறைமதியாளர் கொடுமைகள் செய்தும்
குன்றா பணி புரிந்தார்
மடமை நீக்கினார் மதியை ஊக்கினார்
மார்க்கம் செழிக்கவே
மடமை நீக்கினார் மதியை ஊக்கினார்
மார்க்கம் செழிக்கவே
இஸ்லாம் மார்க்கம் செழிக்கவே
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய்
கோமான் தோன்றினார்
நபிகள் கோமான் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார்
*******************