Перейти к содержимому

பத்திநாதபுரம் புனித ஆசீர்வாதப்பர் பாடல்| ஜெர்மனி ஜேசுஜி | St.Benedict's Tamil song

Germany Jesu.G (ஜெர்மனி ஜேசுஜி)

0:00 / 0:00

பத்திநாதபுரம் புனித ஆசீர்வாதப்பர் பாடல்| ஜெர்மனி ஜேசுஜி | St.Benedict's Tamil song

742 просмотра · 6 дн. назад
Germany Jesu.G (ஜெர்மனி ஜேசுஜி)
9 подписчиков
742 просмотра · 6 дн. назад
திருநெல்வேலி மாவட்டத்தின் பத்திநாதபுரம் ஊரில் இருக்கும் புனித ஆசீர்வாதப்பர் குறித்து நான் எழுதிய பாடல் -ஜெர்மனி ஜேசுஜி பல்லவி ஆண்: மாமணியே! ஆசீர் முனியே! மாந்தர் போற்றும் முன்மாதிரியே! பெண் : பதிவை நகர அரசன் நீயே - எம் வாழ்வு நகர வரங்கள் தாயேன் உன் ஆசீரின் பன்னீரும் வேப்ப மர பதநீரும் ஆனந்த தேனாகும் அனைவரையும் குணமாக்கும் ஆண் : மாமணியே! ஆசீர் முனியே! மாந்தர் போற்றும் முன்மாதிரியே! சரணம் – 1 ஆண் : சீமை நெல்லை ஓரத்திலே............ஆ .......ஆ சீமை நெல்லை ஓரத்திலே பத்திநாத புரத்தினிலே ஆலயம் உனக்காக நாம் தந்தது சீமை நெல்லை ஓரத்திலே பத்திநாத புரத்தினிலே ஆலயம் உனக்காக நாம் தந்தது பெண் :காலமும் பார்க்காமல் நேரமும் நோக்காமல் தினம் தினம் பேரருளை நீ தந்தது ஆண் :ஜூலை தொடக்கம் ஊரே ஜொலிக்கும் பாடல் உமக்கு ஆசீர் எமக்கு ஆ ....ஆ .....ஆ ....ஆ ஆண் :மாமணியே ஆசீர் முனியே மாந்தர் போற்றும் முன்மாதிரியே உன் ஆசீரின் பன்னீரும் வேம்ப மர பதநீரும் ஆனந்த தேனாகும் அனைவரையும் குணமாக்கும் சரணம் – 2 பெண் :பள்ளிக்கூடம் கட்டிடவே ............ஆ .......ஆ பள்ளிக்கூடம் கட்டிடவே அஸ்திவாரம் தோண்டிடவே கதவுநிலை, சன்னல் வரை வேலை நடந்தது பள்ளிக்கூடம் கட்டிடவே அஸ்திவாரம் தோண்டிடவே கதவுநிலை, சன்னல் வரை வேலை நடந்தது ஆண் :நீரின்றி திகைத்தோர்க்கு அதிசயமாய் மழை தந்து தெருநீரில் அணை கட்டி வேலை முடிந்தது பெண் :ஜூலை தொடக்கம் ஊரே ஜொலிக்கும் பாடல் உமக்கு ஆசீர் எமக்கு ஆ ....ஆ .....ஆ ....ஆ பெண் :மாமணியே ஆசீர் முனியே மாந்தர் போற்றும் முன்மாதிரியே உன் ஆசீரின் பன்னீரும் வேம்ப மர பதநீரும் ஆனந்த தேனாகும் அனைவரையும் குணமாக்கும்