Перейти к содержимому

"இசைமாலை" இலங்கை வானொலி பிறை எப்.எம். ..தொகுத்தளிப்பவர் அன்பு அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நவ்பீல் அவர்கள்

M.I.Usanar Saleem- nintavur

0:00 / 0:00

"இசைமாலை" இலங்கை வானொலி பிறை எப்.எம். ..தொகுத்தளிப்பவர் அன்பு அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நவ்பீல் அவர்கள்

17 792 просмотра · 5 лет назад
M.I.Usanar Saleem- nintavur
3,72 тыс. подписчиков
17 792 просмотра · 5 лет назад
நெஞ்சில் நிறைந்த " இசை மாலை!" **************************************** அன்னை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ,நேயர் நெஞ்சங்களில் அன்றும் இன்றும் என்றுமே, சிறந்த பேரபிமான நிகழ்ச்சியாகத் திகழும் ஓர் முத்திரைபதித்த நிகழ்ச்சிதான் " இசைமாலை!". இந்த நிகழ்ச்சி அன்றைய தமிழ்ச்சேவை -2, மற்றும் பின்பு மாற்றம்பெற்ற தமிழ்ச்சேவை, அதன்பின்பு வர்த்தக சேவை, இறுதியாக இலங்கை வானொலி " தென்றல்" போன்றவற்றில் வாரம் ஓர் தடவை அரைமணிநேரம்( மாலை 4.30-5.00 மணிவரை ) ஒலித்த ,நேயர்களின் பேரபிமானம் வென்ற ஓர் சிறப்பு நிகழ்ச்சியாகும்.காலப் போக்கில் பல நிகழ்ச்சி மாற்றங்களால் இந்நிகழ்ச்சி அன்னை வானொலி தென்றலில் ஒலிக்காமல் மறைந்தே போய்விட்டது. அதனால் அபிமான நேயர்கள் மிகவும் மனவேதனைப் பட்டார்கள்.பலவருடங்கள் கடந்தும்போய்விட்டன.நேயர்கள்பலர் அந்நிகழ்ச்சியை மறந்தும் போய்விட்டனர். ஆனால் நேயர்கள் அந்நிழ்ச்சியை மீண்டும் கேட்டு இன்புற வேண்டுமென்ற நோக்கில் , நிகழ்ச்சி காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது, நேயர்கள் மனதிலிருந்து மறந்துபோகக் கூடாதெனும் உயர்ந்த நோக்கில் " இசை மாலை!" எனும் அந் நிகழ்ச்சியை, இலங்கை வானொலியின் பிராந்திய ஒலிபரப்பு நிலையமான " பிறை எப்.எம்" கடந்த 01/02/2021ல் தனது சேவையில் மீண்டும் ஒலிரப்பி நேயர்களை மகிழ்விக்கத் தொடங்கியது. அந்த வரிசையில் ,கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு, நான் பிறை எப்.எம்.சேவைக்கு அனுப்பிவைத்த எனது "இசைமாலை"ப் பிரதி நேற்று ( 23 / 08 / 2021) திங்கள் மாலை 3.30 மணிதொடக்கம் 4.00மணிவரை பிறை எப் எம் வானொலியில் ஒலித்து என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்று பல தசாப்தங்களுக்கு முன்பு ,எமது அன்னை வானொலியின் தமிழ்ச்சேவை இரண்டில் எனது " இசைமாலை"ப் பிரதியொன்றை ஒலிபரப்பி ,என்னை மனம் குளிரவைத்து மகிழ்வித்தார் தமிழ் கூறும் நல்லுலகே அறிந்த, என்றென்றுமே மங்காப் பேரும் புகழும் நிறைந்த மாபெரும் அறிவிப்புச் சிகரம், நேயர்களின் நேசம், பாசம், அன்பு, அபிமானம் போன்றவற்றை ஒருங்கே வென்ற இனிய அறிவிப்பாளர் ,செந்தமிழ்ச்செல்வன் எனும் மங்காப் புகழ் பெற்ற மர்ஹும்.அல்ஹாஜ்.ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்கள். ஆம், இன்று எனது " இசை மாலை!"ப் பிரதியொன்றை இனிதாகப் பிறை எப்.எம். வானொலியில் தொகுத்தளித்து, என்னை இதயம் குளிர வைத்தார்ஏ.ஆர்.எம்.ஜிப்ரி எனும் அந்த மாபெரும் அறிவிப்பாளரின் உடன் பிறந்த தம்பியான , அன்பு அறிவிப்பாளர் ஜனாப்.ஏ.ஆர்.எம். நவ்பீல் அவர்கள்.மனமே நிறைந்தது. அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நவ்பீல் அவர்கள் இந்த அறிவிப்புத் துறையில் சில தசாப்தங்களைக் கடந்தவர்.2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டுவரை இலங்கை ஒலிரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசைகளான தென்றல், மற்றும் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு, இன்னும் ஆசிய சேவை போன்றவற்றில் கடமை பார்த்தவர்.2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிறை எப்.எம் சேவையில் இணைந்து இன்று தானொரு இலங்கை வானொலியின் நிரந்தர அறிவிப்பாளருமாகி ட்டார்.உளம் நிறைந்த பாராட்டுக்கள். உலக அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் முதற்கொண்டு, அன்பு அறிவிப்பாளர்களான ஜனாப் அல்ஹாஜ்.ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, திருமதி.ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள், திரு.சீ.நடராஜசிவம் அவர்கள் , திரு.கே.ஜெயகிருஷ்ணா அவர்கள், திரு.ஆர்.சந்திரமோகன் அவர்கள், ஜனாப் அல்ஹாஜ் .றஸீட் எம்.ஹபீல் அவர்கள், முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அல்ஹாஜ் வீ.ஏ.கபூர் ஆகிய இலங்கை வானொலியின் பிரகாசமான முத்துக்களால் பயிற்றுவிக்கப்பட்ட, அத்தகையோரின் பாசறையில் வளர்க்கப்பட்ட ஓர் முத்தே அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நவ்பீல் அவர்களென்றால் அது மிகையல்ல. இவர் நம்நாட்டுத் தேசியத் தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனமும் , தேசீய இளைஞர் சேவை மன்றமும் இணைந்து 2002ஆம் ஆண்டில் நடாத்திய " துருணு சக்தி" எனும், அகில இலங்கை ரீதியிலான அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்று முதலாமிடம் பெற்று பணப்பரிசுடன் , வெற்றிச் சான்றிழும் பெற்ற ஓர் அதீத திறமை பூண்ட அறிவிப்பாளரேயென்பது மிகவும் பெருமிதத்திற்கும் பாராட்டிற்குரியதுமாகும். "ஜனாப் ராவுத்தர் நெய்னா முகமட் "அவர்கள், அந்த நாட்களில் மிக விறு விறுப்பாக, மகிமை மிக்கதாக நடாத்திய , முஸ்லிம் சேவையின் மிகப் பிரல்யம் வாய்ந்த "அறிவுக் களஞ்சியம் ! " எனும் போட்டி நிகழ்ச்சியை, பின்னைய நாட்களில் பொறுப்பேற்றுக்கொண்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் ,மேடைகளில் ஒலிப்பதிவு செய்து , அவற்றை வானொலியில் ஒலிபரப்பி எவ்வாறு தானொரு, சகலகலாவல்லவன் என்று நேயர்கள் மத்தியில் அன்று நிரூபித்தாரோ, மற்றும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை மேடைகளில், வானொலியில் செவ்வனே நடாத்தித் தானொரு செயல் வீரன் என்று நிரூபித்தாரோ அவரைப்போன்றே, அப்படியான அத்தனை திறமைகளையும் இன்று நேயர்கள் மத்தியில் வெளிக்காட்டி, தானும் தனது சகோதரனைப்போன்ற திறமைவாய்ந்த அறிவிப்பாளனே என்று அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நவ்பீல் அவர்கள் அடிக்கடி தனது திறமைகளால் செயலில் நிரூபணம் செய்து வருவது வெள்ளிடை மலையே! இத்தகைய பெரும் திறமைகள் வாய்ந்த ; நேயர்களின் நேசத்தைப் பெற்ற ; ஓர் பாசமான, அன்பான அறிவிப்பாளரின் இனிய வெண்கலக்குரலில் எனது " இசைமாலை"ப் பிரதி ஒலிபரப்பானதென்பதோ , எனக்குப் பெரும் மகிழ்ச்சியோடு மன நிறைவையும்தருகிறது. நேயர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் அன்பான அறிவிப்பாளர் ஜனாப்.ஏ.ஆர்.எம். நவ்பீல் அவர்கள் மேன்மேலும் ஒலிபரப்புத் துறையிலும், தன் வாழ்விலும் உயர்ந்தோங்கி மனமகிழ்வுடன் நீடு வாழ என் நெஞ்சாரப் பிரார்த்தித்து, வாழ்த்தி நன்றிகள் கூறுவதில் பெருமிதம் காண்கின்றேன். என்றுமே வாழ்க வளமுடன்ன்! இவர்போன்ற சிறந்த அறிவிப்பாளர்களைத் தந்த எனது அபிமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கும்,அபிமான பிறை எப்.எம். வானொலிக்கும் எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் பேரன்புடன் சமர்ப்பணம்!! ( வாழி நீடு!) அன்பு அபிமான நேயர் என்றும் எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர்-இலங்கை ( கி.மா) 0777161224 24.8.2021 """""""""