வீரப்பன் வீழ்வதற்கு 5 நாள் முன் தொடர்பிலிருந்தேன்; தேவராஜ் நேர்காணல் #veerappanstory #veerappan #pmk
Shiva Media Social
0:00 / 0:00
வீரப்பன் வீழ்வதற்கு 5 நாள் முன் தொடர்பிலிருந்தேன்; தேவராஜ் நேர்காணல் #veerappanstory #veerappan #pmk
27 032 просмотра · 12 часов назад
Shiva Media Social
10,6 тыс. подписчиков
27 032 просмотра · 12 часов назад
#shivamedia #tamil #veerappanstory #veerappan #veerappanforest #sathyamangalamforest #karnatakapolice #tamilnadupolice #forest #thehuntforveerappan #veerappanchasingthebrigand #koosemunisamyveerappan #vanniyar #vanniyarsangam #kaduvettiguru #mmhills #gopinatham #hogenakkal #pmk #ntk #namtamilar #velmurugantvk #drramadas #kaduvetti #worldtamil
2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 18 அன்று இரவு 11.00 மணிக்கு வீரப்பன், சேத்துகுழி கோவிந்தன் மற்றும் அவரது குழுவினர் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினாரால் அறிவிக்கப்பட்டது.
வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை அந்த நிகழ்வில் பங்கேற்ற காவல்துறை அலுவலர்கள் பலரும் வெவ்வேறு விதமான கதைகளையும், கருத்துகளையும் சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூலை எழுதுவதற்காக நான் கள ஆய்வில் ஈடுபட்டேன். அப்போது, சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகிலுள்ள கோவிந்தபாடி, வன்னியர் நகர் எனப்படும் கோரப்பள்ளத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர், வீரப்பன் அசவர்களின் கடைசிக் காலத்தில் அவரோடு நெருங்கிய தொடர்பிலிருந்தார் என்பது தெரியவந்தது.
அடுத்தடுத்த விசாரணையில், அவர் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையின் உளவுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராக இருந்த துரைப்பாண்டியன், காவலர் பாண்டிக்கண்ணன் என்ற இருவரோடும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதைப்பற்றி நான் எனது வீரப்பன் வாழ்ந்ததும் வீழந்ததும் நான்காம் தொகுதி நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.
தொடக்கத்தில், தனக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு இல்லை. துரைப்பாண்டியன் உதவி ஆய்வாளர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நேரத்தில், நானும் உதவி ஆய்வாளர் தேர்வில் கலந்துகொண்டேன்.
அந்த வகையில் எனக்கு அறிமுகம் உண்டு. பாண்டிக்கண்ணன் என்னுடைய கட்டட வேலைக்கு உதவியாளராக சில மாதங்கள் கொம்புதூக்கி காட்டுப்பகுதியில் தங்கி வேலை செய்தார் என்று மட்டுமே என்னிடம் தெரிவித்திருந்தார்.
எனக்கும் தேவராசுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் தனக்கும் வீரப்பனுக்கும், தனக்கும் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட பல அலுவலர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கொஞ்சம் வெளிபடையாகப் பேசினார். அந்த வீடியோ நேர்காணலின் தொகுப்பு இது.
"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்"
நூல்களைப் பெறுவதற்கு:- 94434 27327
என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்புங்கள்.