Перейти к содержимому

தேவன் தெரிந்து கொண்டவர்கள்! | GOD CHOSEN! | INNERMAN DEVOTIONS

Grace Tabernacle apostolic church

0:00 / 0:00

தேவன் தெரிந்து கொண்டவர்கள்! | GOD CHOSEN! | INNERMAN DEVOTIONS

51 просмотр · 9 дней назад
Grace Tabernacle apostolic church
730 подписчиков
51 просмотр · 9 дней назад
ரோமர் 8:33 - தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். பிலமோனுடைய வீட்டிலே வேலைக்காரனாக இருந்த வந்த ஒநேசிமு, எந்த வகையிலும் தன் நிலைமையை நியாயப்படுத்த முடியாதவனாக இருந்தான். தேவனுக்கும், தன் உலக எஜமானனாகிய பிலமோனுக்கும் பிரயோஜனமற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த இவன், பிலோமோனுடைய வீட்டிலே இருந்து களவு செய்து, எஜமானனனுக்கு அநியாயம் செய்திரு ந்தான். ஒரு அடிமை செய்ய தகாததை அவன் வெளியிரங்கமாக செய்திருந்தான். ஒநேசிமுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று பில மோன் தீர்மானித்திருந்தாலும், சபையி லிருந்த விசுவாசிகள் அவருக்கு எதி ராக எதையும் பேசியிருக்க மாட்டார் கள். சுருக்கமான சொல்லப் போனால், அவன் தண்டனைக்கு பாதிரனாக இரு ந்தான். தேவ இரக்கம் வெளிப்பட்ட போது, அவன் மனமாற்றமடைந்தான். தேவ கிருபையினாலே கிறிஸ்துவின் விசுவாசியானான். ஆனாலும், அவனை காணும் மற்ற மனிதர்கள், சக விசுவாசிகள் அவனை எப்படி அடையாளம் கண்டிருப்பபார்கள்? தன் எஜமானனைவிட்டு ஓடிசென்ற அடிமையானவன் என்று கூறியிருப்பார்கள் அல்லவா? இன்றைய நாட்க ளிலும், இத்தகைய மனநிலையானது இன்றைய நாட்களிலும் மனிதர்கள் மத்தியிலும், சில வேளைகளிலே சபை நடுவிலும் காணப்படுகின்றது. இவர் யார் என்று ஒரு விசுவாசிகயைக் குறித்து கேட்கும் போது, அவர் முற்காலங்களிலே செய்த குற்றத்தை கூறி அல்லது அவருடைய குடும்ப த்தின் குறைவைக் கூறி அறிமுகப்படுத்துவதை நீங்கள் கேள்விப்பட்டிரு ப்பீர்கள். பிரியமானவர்களே, தேவன்தாமே, 'நம்முடைய பாவங்களுக் குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.' (சங்கீதம் 103:10) 'தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயி ருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கி றார்;. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிரு க்கிறார்.' (ரோமர் 8:29-30). எனவே, மற்றவர்களின் குறைவுகளினாலே உங்களை மேலானவர்கள் என்று எண்ணாமல், உங்கள் மேல் வெளிப்பட்ட தேவ இரக்கத்தையும், சகாயம் செய்யும் கிருபையையும் குறித்து மேன்மை பாராட்டுங்கள். ஜெபம்: என்னுடைய தாழ்மையில் என்னை நினைத்த தேவனேஇ என்மேல் வெளிப்பட்ட உம்முடைய மகா பெரிதான கிருபையை நான் மறந்து போய்விடாமல் நன்றியுள்ளவனாக இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென். மாலைத்தியானம் - 1 கொரி 1:30 Romans 8:33 - Who shall lay any thing to the charge of God's elect? It is God that justifieth.(KJV) Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada Background Music: Recorded by Grace Tabernacle apostolic church Our Website: https://gtachurch.ca/daily https://gtachurch.ca/im Produced by: Grace Tabernacle apostolic church, Toronto Canada