Перейти к содержимому

Nilavaaga Neeyum! Mugilaga Naanum!! | சியாமளா கோபு நாவல்கள்| tamil audio novels | RJ Subeetha Kannan

Tamil Novels Audiobooks

0:00 / 0:00

Nilavaaga Neeyum! Mugilaga Naanum!! | சியாமளா கோபு நாவல்கள்| tamil audio novels | RJ Subeetha Kannan

21 576 просмотров · 3 месяца назад
Tamil Novels Audiobooks
43,1 тыс. подписчиков
21 576 просмотров · 3 месяца назад
Files shared here are with the permission from respective copyright holders.    • Nilavaaga Neeyum! Mugilaga Naanum!! | சியா...   “உன்னாலே வர முடியாதுன்னு எனக்கு தெரியும். சரி விடு. நான் அம்மாவைக் கூப்பிடுகிறேன்” குரலில் சிறு அலுப்பும் அதை விட எரிச்சலும் இருந்தது. உண்மை தான். ஹரிபிரசாத் ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. நிதி இலாக்காவில் அண்டர் செக்ரட்டரியாக இருக்கிறான். மிகவும் முக்கிய இலாகா. முக்கிய பதவி. அவனால் அத்தனை சுலபத்தில் ஆபிசை விட்டு வருவது இயலாது. மனு மற்றும் ஹரியின் குடும்பம் உண்மையில் உறவினர் கிடையாது. ஆனால் சிறுவயது முதல் அருகருகே வளர்ந்தவர்கள். எப்படி என்றால் மனுவின் தந்தையுடன் ஹரியின் தந்தை பணியாற்றிய போது தமிழ் இவர்களை இணைத்திருந்தது. ஆகவே குடும்பமாகவே ஒருவருக்கு ஒருவர் நெருங்கியே பழகினார்கள். குறிப்பாக அத்தை மாமா என்று அழைத்துக் கொள்ளும் அளவிற்கு. மான்யதாவே ஹரியை தன் அத்தை மகனாகவே நினைத்து தான் சிறுவயது முதல் இன்றளவும் பழகிக் கொண்டிருக்கிறாள். மனுவின் தந்தையின் ஆலோசனையின் படி வளர்ந்தவன் ஹரி. அதனால் இன்று அவன் ஒரு அய்.ஏ. எஸ் அதிகாரி. அதுவும் முக்கியமான இடத்தில். அது தெரிந்து தான் நூறுமுறை அவனால் தன்னை அழைத்துப் போக வர முடியுமா என்று கேட்டாள் மான்யதா. ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வரும் அவளை சந்திப்பதற்கு அவனுக்கும் ஆவலாக இருக்கவே தானாகவே அவளை அழைத்துப் போவதாக சொல்லியிருந்தான். விமான நிலையத்தில் இருந்து வீடு வரும் அந்த நாற்பது நிமிடங்களும் அவளுடன் தனித்துப் பேச சந்தர்ப்பம் கிடைக்கும். அதை நழுவ விட விருப்பமில்லை அவனுக்கு. ஆனைமலையில் மோதிய காற்று சில்லென்று முகத்தில் அடித்தது. சிறு குளிர் உடலை நடுக்கியது. நெஞ்சை நிமிர்த்தி வாயையும் மூக்கையும் திறந்து நன்றாக மூச்சை இழுத்து நிதானமாக வெளியே விட்டாள் மான்யதா. துப்பட்டாவால் தலையை மூடி கழுத்தைச் சுற்றி கொண்டாள். காரின் கண்ணாடி கதவைத் திறந்து வைத்துக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள் இருவரும். இந்த மலைக்காற்று குதுகுதுவென்று இருக்கவே கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டாள் மனு. இதைப் பார்த்துக் கொண்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்த ஜெகன் வலது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு இடது கையை அவள் குறுக்கே நீட்டினான். சட்டென்று அவன் கரம் தன் மாரின் குறுக்கே நீண்டு வரவே திடுக்குற்றவளாக கிரீச்சிட்டாள். “ஏய் என்ன செய்யறே?” “என்ன சொன்னே? ஏயா? ஹல்லோ அதெல்லாம் அந்த காலம் பாப்பா” “என்ன அந்த காலம். நீ திடீர்னு கையை இப்படி என்னை தொட்டு விடுவது போல கொண்டு வருவே. நான் பார்த்துக்கிட்டு இருக்கனுமா?” “யார் பார்த்துக்கிட்டு இருக்க சொன்னா? பதிலுக்கு நீயும் என்னை இப்படி தொட்டு விடு. அவ்வளவு தான். வெரி சிம்பிள்” மீண்டும் அதேப் போல கையை நீட்டி அவளை அலற வைத்தான். கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொண்டாள். “நக்கலா?” “பின்னே என்னவாம்? பாவம் குளிரில் நடுங்கறியே. விண்டோவை ஏற்றி விடலாம் என்று நினைத்தேன்” “உன் பக்கமே அதற்கான பட்டன் இருக்குமே” “ஓ உனக்கு தெரியும் அல்லவா!” “ஏன் என்னையும் பட்டிக்காடுன்னு நெனச்சியா?” “பட்டணமா இருப்பதனால் தானே வம்பே” குரலில் கிறக்கத்துடன் சொன்னவனை முறைத்தாள். #tamilaudionovels #ramanichandrantamilnovelsaudiobooks #ramnanichandrannovels #rcnovelsaudio #ramanichandrantamilnovels #ramanichandrannovelsaudio #ramanichandrannovelaudiobook #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudiobooks #tamilnovelsaudiobooks #tamilnovelsaudiobook #tamilnovelstory #tamilstoriesaudio #atmtamilnovels #atmnovels #rjsuja