Перейти к содержимому

ஆனி அமாவாசையில் மேல்மலையனூர் அங்காளம்மன் தரிசனம் 🕉️ Melmalayanur Angalamman Temple! #devotional

PEN TV TAMIL

0:00 / 0:00

ஆனி அமாவாசையில் மேல்மலையனூர் அங்காளம்மன் தரிசனம் 🕉️ Melmalayanur Angalamman Temple! #devotional

1 103 просмотра · 2 месяца назад
PEN TV TAMIL
253 тыс. подписчиков
1 103 просмотра · 2 месяца назад
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் இறைவன் : தாண்டேஸ்வரர் இறைவி : அங்காளம்மன் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம், மயில் கொன்றை தலவரலாறு : போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்ட காருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும், தண்ட காருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியைக் கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரணப் பெயரானது. மேல்மலையனூரில் மலையன் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச்சுவடுகள் இருந்தன என்றும், மேல்மலையனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது, மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்கிய இடமாகக் கருதப்படுவதால் அமாவாசை தோறும் தொடர்ந்து மூன்று முறை வருகை தந்தால் அவர்களைப் பிடித்துள்ள பிணிகள், தோஷங்கள், வைப்பு, ஏவல், பில்லி, சூனியம், காட்டேரி, சேட்டை எதுவாயினும் அம்மன் திருவருளால் தானாக விலகுகிறது. குலதெய்வ வழிபாடு செய்ய மக்கள் வெள்ளி (ம) ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்கோயிலுக்கு வந்து மொட்டையடித்து, காதணி விழா செய்வது, பொங்கல் வைத்து பூஜை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, கஞ்சுலி கபால வேடம், வேப்பஞ்சீலை, மஞ்சள் ஆடை அணிந்து வந்து வேண்டுதல் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்புகளாகும். இத்திருக்கோயிலுக்கு ஒருமுறை வருகை தந்து தங்கள் எண்ணத்தை அம்மனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கிறது. இத்திருக்கோயில் இளங்கோயில் வகையைச் சேர்ந்தது, சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. திருவிழாக்கள் அமாவாசைதோறும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரியன்று தொடங்கி 7-ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.