Перейти к содержимому

திருவாசகம் | திருச்சதகம் | 04 ஆத்தும சுத்தி | ஆடுகின்றிலை கூத்துடையான் | மாணிக்கவாசக சுவாமிகள்

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருவாசகம் | திருச்சதகம் | 04 ஆத்தும சுத்தி | ஆடுகின்றிலை கூத்துடையான் | மாணிக்கவாசக சுவாமிகள்

137 просмотров · 5 дн. назад
Shaivamum Thamizhum
3,48 тыс. подписчиков
137 просмотров · 5 дн. назад
08.005 திருவாசகம் | திருச்சதகம் | 04 ஆத்தும சுத்தி | ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு | மாணிக்கவாசக சுவாமிகள் Join To Support.....👇👇👇👇👇    / @shaivamumthamizhum   #Thiruvasagam | #Manikkavasagar | #ShivamumThamizhum "சதகம்" என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன. நான்காவதாக ஆத்தும சுத்தி. ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிண நெஞ்சே தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே. ..... (01) அறிவிலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறியெலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப்பானைப் பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் மாறாடுதி பிண நெஞ்சே கிறியெலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. ..... (02) மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மதியிலி மடநெஞ்சே தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கனெச் சிவனவன் திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் கீறு கின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. ..... (03) கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை விற்றெலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப்பாதம் முற்றிலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் அற்றவாறும் நின்னறிவும் நின்பெருமையும் அளவறுக் கில்லேனே. ..... (04) அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்ததுமிலை நெஞ்சே பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. ..... (05) புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்கு உகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை ஆண்டவன் கழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்கு என்செய்கேன் வினையேனே. ..... (06) வினை என்போல் உடையார் பிறரார் உடையான் அடி நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே முனைவன் பாத நன்மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே. ..... (07) ஏனை யாவரும் எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனை என் சிவலோகக் கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே. ..... (08) ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித் தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. ..... (09) வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டினும் உண்டு உடுத்து இருந்தேனே. ..... (10) குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"