நெஞ்சினிலே நினைவு முகம் | Aju Devanai Publications Tamil Novels | Tamil audio novels
Aju Deivanai publications Tamil novels
0:00 / 0:00
நெஞ்சினிலே நினைவு முகம் | Aju Devanai Publications Tamil Novels | Tamil audio novels
6 326 просмотров · 4 дня назад
Aju Deivanai publications Tamil novels
12,4 тыс. подписчиков
6 326 просмотров · 4 дня назад
கேசவமூர்த்தி வசந்தா இவர்களுக்கு மூன்று பெண்கள் ஒரு பையன்.
கேசவமூர்த்தி ஆர்மியில் வேலை செய்து ஒரு போரில் காலை இழந்தவர்..
மூத்த மகள் வசந்தாவுக்கு தன்னுடைய ரிட்டயர்மென்ட் பணத்தை வைத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் குடும்பம் நடத்த கஷ்டப்படவே இரண்டாவது மகள் சாந்தினி அப்பாவின் பொறுப்பை எடுத்துக்கொண்டு வெளியூரில் நர்ஸ் வேலை பார்த்து குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறாள்.
ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு வந்துவிட்டு ஊருக்கு செல்லும் போது இரவு நேரத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து நிலாவை ரசித்துக்கொண்டே செல்வது வழக்கம்..
அந்த நிலவில் அவளுக்கு அவ்வப்போது ஒரு முகம் தோன்றுவது உண்டு.. அது ஒரு ஆணின் முகமாக இருக்கவே அவளுக்கு சில சமயம் சிரிப்பாக இருக்கும்.. இப்படி எல்லாமா ஒரு கனவு வரும் என்று நினைத்துக் கொள்வாள். அதைப்பற்றி வெளிப்படையாக அவள் யாரிடமும் சொன்னது இல்லை..
அவள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு வீட்டிலிருந்து நர்ஸ் உதவி செய்ய முடியுமா என்று ஒரு பணக்கார வீட்டில் இருந்து அழைப்பு வருகிறது..
ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ அதிகாரி சாந்தினியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்..
அவள் அங்கு உதவியாக செல்ல இருப்பது அந்த செல்வந்தரின் ஒரே மகன்..
விளையாட்டில் ஆர்வம் உள்ள அவனுக்கு ஏதோ விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் இருக்கிறான்.. அவனுக்கு உதவியாக சாந்தினி அங்கு செல்கிறாள்.
அங்கு போய் பார்க்கும்போது நிலவில் தான் பார்த்த முகத்தை அங்கு நேரில் காண்கிறாள்... அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..
#tamilaudionovels #tamilnovel #tamilnovelaudio #tamilaudiobook #tamilstory #tamilromance #tamilaudiostories #tamilliterature #tamilwriters #tamilreaders #novelaudiobook #audiobooktamil #tamilyoutube #tamilcontent #தமிழ்நாவல் #நெஞ்சினிலேநினைவுமுகம் #அஜுத்யாகாந்தன் #AjuDevanaiPublications #TamilNovelAudioChannel
#ramanichandrantamilnovelsaudio