Перейти к содержимому

மனுக்குலம் மீட்க மனுவுருவாகி | Christmas Song | கிறிஸ்து பிறப்பு பாடல் 2026 | New Christmas Song

Disee Music

0:00 / 0:00

மனுக்குலம் மீட்க மனுவுருவாகி | Christmas Song | கிறிஸ்து பிறப்பு பாடல் 2026 | New Christmas Song

2 088 просмотров · 2 дн. назад
Disee Music
883 подписчика
2 088 просмотров · 2 дн. назад
மனுக்குலத்தின் மீட்பிற்காக இறைமகனாகிய இயேசு கிறிஸ்து இம்மண்ணில் மனித உருவெடுத்து பிறந்தார். பாவ இருளில் மூழ்கிய உலகிற்கு பேரொளியாக வந்த இயேசு, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பிறந்து, நம் வாழ்வை அன்பாலும், அமைதியாலும், மகிழ்ச்சியாலும் நிறைக்க வேண்டும் என்பதே இப்பாடலின் இனிய செய்தியாகும். பெத்லகேமின் எளிய குடிலில் பிறந்த இயேசு, நம் இதயக் குடிலிலும் பிறக்க வேண்டும். அவருடைய இறை ஒளி நம் வாழ்வில் பிரகாசித்து, தூய்மையான வாழ்க்கை வாழவும், எளியோரை அன்பு செய்யவும், அன்பிலும் பணிவிலும் வளரவும் தேவையான அருளை நமக்கு வழங்க வேண்டும். இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் இறைமகன் இயேசுவின் பிறப்பின் மகிழ்ச்சியையும், மீட்பின் செய்தியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். பாடலைக் கேட்டு இறையருளில் மகிழுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! ---------------------------------------------------------------------------------------------------------------- பாடல் & இசை: J.F.A. Deselva இசை இயக்கம்: D.Joseph படத்தொகுப்பு : Xavier Thilak பாடியவர்: Kirithika & A. Jayakumar Recording & Mixin: Ayya Music Tracks By D.Joseph Editing Studio: Xaviers E Mixs தயாரிப்பு: F. Anto Arulraj நன்றி: Mrs. Prajakta Arulraj & Master. Vivaan Arulraj ---------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: மனுக்குலம் மீட்க மனுவுருவாகி மண்ணில் பிறந்த இறைமகனே என் உள்ளக்குடிலில் நீ பிறந்தாலே வாழ்ந்திடுவேனே நிறை மகிழ்வுடனே பாவ இருள் சூழ்ந்த பாருலகில் பேரொளியாக நீ பிறந்தாய் இறை ஒளியை பொழிந்தென்னை தூய்மையாய் வாழ்ந்திட அருள் புரிவாய் வாழ்வில் எளியோரை அன்பு செய்ய எளிமையின் கோலத்தில் நீ பிறந்தாய் அன்பும் பணிவும் எனில் வளர நல்லதோர் உள்ளத்தை எனக்கருள்வாய் #christmas #christmassong #christmasmusic #christmaseve #மனுக்குலம்மீட்க #TamilChristmasSong #ChristmasSongTamil #JesusBirthSong #TamilChristianSong #TamilDevotionalSong #ChristmasSpecial #JesusChrist #BabyJesus #ChristmasWorship #TamilGospelSong #NativitySong #Christmas2026 #இயேசுபிறப்பு #கிறிஸ்துமஸ்பாடல்