Перейти к содержимому

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு! வேணுகோபால பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் | கல்லாங்குளம்

SAKTHI MAIYAM

0:00 / 0:00

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு! வேணுகோபால பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் | கல்லாங்குளம்

98 просмотров · 13 дней назад
SAKTHI MAIYAM
75 подписчиков
98 просмотров · 13 дней назад
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாமா ருக்மணி தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் சன்னதியில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி ஸ்ரீ வேணுகோபால பெருமாளுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் துளசி மாலைகளால் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரத்தில் அருள்பாலித்த வேணுகோபால பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் நாலாயிர திவ்யப் பிரபந்தம் விண்ணப்பம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, வேணுகோபால பெருமாளை வழிபட்டனர். 🙏 சக்தி மையம் – ஆலயங்கள், ஆன்மிக நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் நமது பாரம்பரியத்தை உங்களிடம் கொண்டு சேர்க்கும் தளம். 🔔 இதுபோன்ற ஆன்மிக வீடியோக்களுக்கு சக்தி மையம் (SAKTHI MAIYAM) YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு அளிக்கவும். #கிருஷ்ணஜெயந்தி #வேணுகோபாலபெருமாள் #திருமஞ்சனம் #கல்லாங்குளம் #அண்ணாமலையார்கோவில் #ராசிபுரம் #நாமக்கல் #சக்திமையம் #KrishnaJayanthi #VenugopalaPerumal #TamilDevotional #Temple