ஹர ஹர சிவா,shiva devotional song
எல்லாம் சிவமயம்
0:00 / 0:00
ஹர ஹர சிவா,shiva devotional song
286 просмотров · 7 дней назад
எல்லாம் சிவமயம்
7 подписчиков
286 просмотров · 7 дней назад
[பல்லவி]
ஹர ஹர சிவா,
ஓம் ஹர ஹர சிவா…
[சரணம் 1]
கருவினில் இருந்தேனே சிவமே,
தனிமையில் இருந்தேனே சிவமே,
உயிரும் தந்தாயே,
உறவும் தந்தாயே சிவமே,
உனக்கென பிறப்பேனா? மறந்து உறவுக்கு உழைப்பேனா சிவமே…
[பல்லவி]
ஹர ஹர சிவா,
ஓம் ஹர ஹர சிவா…
[சரணம் 2]
மீண்டும் உன்னை சேரவே
இதயம் துடிக்குதே,
மீண்டும் இந்தப் பிறவி வேண்டாம்
என்று தோணுதே,
என்னை ஏற்பாயோ?
என் கர்ம வினை எளிதென
தீர்ப்பாயோ?
வேண்டுகிறேன் உன்னை,
சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்,
வரம் தருவாய் சிவமே,
அருள் புரிவாய் சிவமே…
[பல்லவி]
ஹர ஹர சிவா,
ஓம் ஹர ஹர சிவா…
[சரணம் 3]
பிறப்பிலும் நீயே,
இறப்பிலும் நீயே,
இதை அறியாத இதயத்தின்
தாகம் தீரவே,
இப்பிறவி முழுவதும் போகவே,
என் இளமையும் முதுமையும் காணவே,
இரவென பகலென போனதே,
இன்பமும் துன்பமும்
சமரசம் செய்யவே,
உன்னை சேர அறிவொன்று தருவாயோ?
உன் அருள் ஒன்று தருவாயோ சிவமே?
[இறுதி பல்லவி]
ஹர ஹர சிவா,
ஓம் ஹர ஹர சிவா…
ஹர ஹர சிவா,
ஓம் ஹர ஹர சிவா…