நத்தம் ஆதிமூலப் பெருமாள் கோயில்
Thagazhi தகழி
0:00 / 0:00
நத்தம் ஆதிமூலப் பெருமாள் கோயில்
2 690 просмотров · 4 г. назад
Thagazhi தகழி
4,28 тыс. подписчиков
2 690 просмотров · 4 г. назад
மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் படியெடுக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கனைக் குறிப்பிடாது இராஜராஜனின் பெயரிலே படியெடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது? இதை நாம் எப்படி அறிந்தோம்? ஒரு பழம்படிக் கல்வெட்டின் கதை இது. இக்கதை அறிய நாம் நத்தம் செல்ல வேண்டும். நத்தம் என்றால் உடனே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் என்று நினைத்து விடாதீர்கள். இது திருச்சிராப்பள்ளியிலே லால்குடி வட்டத்தில் புள்ளம்பாடிக்கு அருகிலுள்ள நத்தம். இங்குள்ள ஆதிமூலப் பெருமாள் கோவிலில் தான் இந்தக் கல்வெட்டு உள்ளது. இக்காணொளி இந்த கல்வெட்டையும் பெருமாள் கோவிலையும் பதிவு செய்கிறது.
பணிவுடன் இக்காணொளியை மறைந்த திரு இல.தியாகராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.