Перейти к содержимому

ASIRVATHIUM(ஆசிர்வதியும் கர்த்தரே) - ABIRAHAMAI(ஆபிரகாமை ஆசிர்வதித்த) - BHARATHI PAUL - KJ @

Christian Record Archive Kutty Jaskar

0:00 / 0:00

ASIRVATHIUM(ஆசிர்வதியும் கர்த்தரே) - ABIRAHAMAI(ஆபிரகாமை ஆசிர்வதித்த) - BHARATHI PAUL - KJ @

150 748 просмотров · 4 года назад
Christian Record Archive Kutty Jaskar
18,7 тыс. подписчиков
150 748 просмотров · 4 года назад
திருமதி பாரதி பால் அம்மையார் அவர்கள் 1936 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் பிறந்தார்கள்.அவர்களுக்கு நமது இசை களஞ்சியத்தின் சார்பாக நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.இவர்களது பூட்டனார் Rev.டக்கர் ஏசுவடியான் ஐயரவர்கள் மெய்ஞானபுரத்தை சேர்ந்தவர்கள்.ஆகவே எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமையே. அவர்கள் சிறுவயதில் நாகர்கோயில் பள்ளியாடி L M S (எல்.எம்.எஸ்) பள்ளியில் சேர்ந்து படித்தார்கள் .இவரது தந்தையார் சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியதனால் இவரது கும்பத்தினர் சென்னையில் வாழ்ந்து வந்தனர். அடையார் பெசன்ட் பள்ளியில் படித்த நாட்களில் இவர்கள் வீணை,கர்நாடக இசை,பரதநாட்டியம் முதலியவற்றை கற்று தேர்ந்தார்கள்.மேலும் தட்டச்சு ஓவியம்,பெயின்டிங் எம்பிராய்டரி உடுப்புகள் தைத்தல் போன்ற பலவிதத் திறமைகள் உடையவராக விளங்கி பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றார்கள் .ஊடகங்கள் வளராத அக்காலத்தில் சுமார் 55 வருடங்களுக்கு முன்பே இவர் பாடல்களை பாடி வெளியிட்டார்கள் .சுமார் 72 பாடல்களைப் பாடியுள்ளார்கள்.நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து இறை இசை வானொலி நிலையத்தார் இவருக்கு “Nightingale of Tamil Christian Songs '' என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கௌரவித்தனர்.1960 களில் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவர உதவிய H M V தங்கையா, இசை அமைப்பாளர் திரு.கூலிங் ராஜையா ,பிரபல மலையாள இசை அமைப்பாளர் திரு,சாம் ஜோசப் (ஷியாம்) ஆகியோர் இவரது வளர்ச்சிக்கு மிகவும் உதவியவர்களாவர்.இன்று அவர்கள் பாடிய இரண்டு திருமண பாடல்களை பதிவேற்றம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.நன்றி.கடவுள்தாமே அவர்களையும் அவர்கள் கும்பத்தையும். அவர்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Dr.P.Kutty Jaskar 9443194846 பாடல் : 1. ஆசிர்வதியும் கர்த்தரே பாடல் ஆசிரியர்: சாமுவேல் பாக்கியநாதன் இசை : கூலிங் ராஜய்யா வருடம்:1977 பாடல் :2. ஆபிரகாமை ஆசிர்வதித்த பாடல் ஆசிரியர்: மேரி லாசரஸ் இசை : கூலிங் ராஜய்யா வருடம்: 1977