சுடலை மாடன் மெல்லிசை | sudalai madan melody song | Devotional Song tamil
thattanthari Sudalai madan temple
0:00 / 0:00
சுடலை மாடன் மெல்லிசை | sudalai madan melody song | Devotional Song tamil
2 362 просмотра · 4 месяца назад
thattanthari Sudalai madan temple
384 подписчика
2 362 просмотра · 4 месяца назад
Song presented by : RDR Creations ( https://rdrcreations.com )
மாங்கன்றுவிளை அருள்மிகு தட்டாந்தறி சுடலை ஆண்டவர் மற்றும் பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கோயில் வரலாறு :
சுயம்புவாக உருவான கோவில்: இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுடலை மாட சுவாமியை குலதெய்வமாக வைத்து வழிபடுகின்றனர். ஆனால் அவை அனைத்து கோவில்களை காட்டிலும் நமது தட்டான்தறி சுடலை ஆண்டவர் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
அதாவது எப்படி சீவலப்பேரியில் சுடலை ஆண்டவர் தானாக வந்து காட்சி கொடுத்த இடத்தில் இன்று கோவில் அமைந்து சிறப்பு பெற்றுள்ளதோ, அதேபோல் நமது ஆலயமும் சுடலை மாடன் மற்றும் 21 மாடன் மார்கள் விரும்பி அமர்ந்த இடம் ஆகும்.
முந்தைய காலத்தில் இப்போது நமது ஆலயம் அமைந்துள்ள தட்டான்தறி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி புதர் சூழ்ந்து கரும்பனை (பனைமரம்) நிறைந்த பகுதி என்பதால் பனையேறுதல் கள் இறைத்தல் போன்றவை அங்கு வழக்கமாக நடைபெறும்.
நமது ஆலயம் அமைந்துள்ள பகுதியில் நீர் ஓர் ஓடை அமைந்திருந்தது, சுமார் 2000 கால கட்டத்திலும் இந்த நீர் ஓடை மங்கிய நிலையில் இருந்தது பின்னர் நகரமயமாக்கத்தால் இன்று அந்த ஓடையை நம்மால் காண முடியாது. மழைவெள்ளம் பெருக்கெடுத்து இந்த ஓடை நிரம்பி ஓடும் போது, பாய்ந்தோடும் அந்த ஓடை வெள்ளத்தில் நீந்தி (நீச்சல்) வருவது நமது சுடலை ஆண்டவர் மற்றும் அவருடன் சேந்த்து 21 மாடன்மார்களின் வழக்கமாக இருந்தது.
அப்போது இந்த பகுதி மக்கள் கரும்பனை (பனைமரம்) யிலிருந்து கள் இறைத்து பகிரும் போது, இயல்பாகவே மது, மாமிசம், சுடுகாட்டு பிணம் போன்றவை விரும்பி உண்ணும் நமது மாடன்மார்கள் அந்த பகுதியில் பனைமர கள் இறைப்பதை பார்த்து அதை வாங்கி விரும்பி உண்டு அந்த பகுதி மக்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து வந்தனர். பின்னர் அதே பகுதியில் கோவில் கொண்டு இன்றும் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
பலநூறு வருடங்களுக்கு பிறகு இன்று பல்வேறு முன்னேற்றங்களுடன் பெரியதாய் ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் எடுத்து சிறப்பாக நாம் காணும் சுடலை ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. நமது கோவிலில் சுடலை ்மாடன், சந்தணமாடன் இருவருக்கும் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின் போது சுடலை ஆண்டவருக்கு பிடித்தமான படையல் சோறு சமைக்கப்பட்டு 21 படுக்கைகள் இடப்பட்டு 21 மாடன்மார்களுக்கும் சமர்ப்பிக்கப்படும்.
#ThattanThari #SudalaiMadan #Maankandruvilai #PathreswariAmman #TamilBhakti #SudalaiMadanSongs #TempleFestival #Devotional #SamiAattam