ஆன்மீக சுடர் வீசும் ஜீலானி💙- Nagore Milad Un Nabi ﷺ
Kadhiriyya Studio
0:00 / 0:00
ஆன்மீக சுடர் வீசும் ஜீலானி💙- Nagore Milad Un Nabi ﷺ
4 719 просмотров · 5 дней назад
Kadhiriyya Studio
42,8 тыс. подписчиков
4 719 просмотров · 5 дней назад
நாகூரில் ஜஷ்னே ஈத் மிலாது கமிட்டி நடத்திய 58-ஆம் ஆண்டு மாபெரும் மிலாதுன் நபி கொண்டாட்டம்.
நபிகள் நாயகம் அவர்களின் 1501-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகூர் தர்காவிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஊர்வலம் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் ஹலீலுல்லாஹ் சாஹிப் காதிரி அவர்களின் தலைமையில் தொடங்கி, நாகூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சுற்றி வந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் சென்ற பகுதிகளை அலங்கரித்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜியாவுல் முஹ்சின் சாஹிப் அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில், இந்த விழாவினை ஏற்படுத்தித் தந்த ஜஷ்னே ஈத் மிலாது கமிட்டியின் நிறுவனர், காலம் சென்ற ஹஜ்ரத் உஸ்தாத் பானா சாஹிப் காதிரி அவர்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.