Перейти к содержимому

கருணையின் கப்ரினை முகர்ந்திடுவேன்

Kavimagan Kader

0:00 / 0:00

கருணையின் கப்ரினை முகர்ந்திடுவேன்

16 543 просмотра · 4 года назад
Kavimagan Kader
276 подписчиков
16 543 просмотра · 4 года назад
மர்ஹூம் பிரபு முஹைதீன் தம்பி அவர்களது நினைவாக, அன்னாரது குடும்பத்தினரால் வெளியிடப்படும் கரீபுன் நவாஸ் புகழ் பாடல்... பாடலாக்கம்: கவிமகன் காதர் இசை : சாஜித் கான் பாடியவர் : சூப்பர் சிங்கர் ரிஸ்வான் எண்ணம் ஒருங்கிணைப்பு : B.S. அஹ்மது ஸாலிஹ் ஃபஹீமீ --------------------------------------------------------------------------------- பல்லவி அரவணைப்பீர் என்னை ஆதரிப்பீர் உங்கள் திருக்கரத்தால் சிரம் கோதிடுவீர் யா காஜா முஈனுத்தீன்... நிலம் செழிக்க விழும் மழைத்துளியாய் எந்தன் மனங்களிக்க வரம் தந்திடுவீர் யா கரீபுன் நவாஸ் சிஷ்தி... அநுபல்லவி கொட்டும் அருவி நீர் குளித்திட இயலா சிட்டுக் குருவி நான் காஜாவே எட்டா வானம் உமைத் தொட முடியாத பட்டாம் பூச்சி நான் காஜாவே பட்டுப் போன கொடி துளிர்த்து மொட்டாக தொட்டுத் தடவுக காஜாவே வெற்றுச் சிப்பி ஒளி முத்தாய் முகிழ்ந்திட ஒற்றைத் துளி தருக காஜாவே சரணம் 1 ஆழியிலே சிறு துரும்பெனவே - பொங்கும் அலை முழுதும் உமைத் தேடிடுவேன் காதலித்தே புத்தி பேதலித்தே - உங்கள் பாதத்திலே பதம் பாடிடுவேன் ஊழிக் காற்றிலே அணைந்திடாம லருள் வெளிச்சம் தருவீர் எஜமானே... வாழும் போதிலே வள்ளல் முகங் கண்டு செழித்திட வேண்டுமென் சீமானே சரணம் 2 காடு கடல் மலை நாடுகலெல்லாம் கடந்தே அஜ்மீர் நகர் வருவேன் காரணைரைக் கனிவோடு பணிந்தே கருணையின் கப்ரினை முகர்ந்திடுவேன் ஏழையெந்தன் இடர்ப்பாடு அனைத்தும் அழுதழுதே அங்கு பகர்ந்திடுவேன் பாலைவனம் மலர்க்காடு ஆகாமல் பாலகன் எங்கனம் நகர்ந்திடுவேன் --------------------------------------------------------------------------------- புதுப் பொழிவுடன் நெல்லை மாநகரில் K.G.N. ELECTRONICS & HARDWARES SAYAD'NA ABUBACKER SIDDIQUE PLAZA, 11/51 TIRUCHENDUR ROAD, RAHMATH NAGAR - OFFICER COLONY, TIRUNELVELI. தொடர்புக்கு : 04624564433, 7708355206, 9600454433