கஜபதி குலபதி: தமிழ் அறிவோம் - சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கதை "BookBox.com"
BookBox Tamil
0:00 / 0:00
கஜபதி குலபதி: தமிழ் அறிவோம் - சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கதை "BookBox.com"
19 526 просмотров · 11 л. назад
BookBox Tamil
7,65 тыс. подписчиков
19 526 просмотров · 11 л. назад
"Gajapati Kulapati" is the seventh animated story of a brand new series called "Little BookBoxers". Through this series we would like to provide stories that are simple and fun for toddlers (2 to 4 year olds) who have just started reading and learning languages.
As always, our stories are powered by Same Language Subtitling (SLS) that helps improve reading and language learning, subconsciously. Visit www.bookbox.com and www.planetread.org to know more.
This particular story has been animated by BookBox in partnership with Tulika Books (http://www.tulikabooks.com/). The print version available is available in many Indian languages here: http://goo.gl/5ugA6q.
About this story: Small noses catch small colds. Big noses catch big colds. Poor Gajapati Kulapati has a big nose and he caught a big cold...
கஜபதி குலபதி
அசோக் ராஜகோபாலன்
கஜபதி குலபதி
ஒரு கோயில் யானை.
கஜபதி குலபதி
ஒரு பெரிய யானை.
கஜபதி குலபதி
ஒரு சாதுவான யானை.
ஓர் இரவு, மழை பெய்தது.
கஜபதி குலபதி அந்த மழையில்
முழுவதும் நனைந்து விட்டான்.
கஜபதி குலபதிக்கு
சளி பிடித்து விட்டது.
சின்ன மூக்குகளுக்கு
சின்னதாய் சளி பிடிக்கும்.
பெரிய மூக்குகளுக்கு
பெரியதாய் சளி பிடிக்கும்.
கஜபதி குலபதிக்கு
பெரிய சளி பிடித்து விட்டது.
"உனக்கு
வாழைப்பழம் வேண்டுமா?"
என்று பழக்காரன் கேட்டான்.
கஜபதி குலபதி வாயைத் திறந்து
ஆஆஆ...
ஆஆஆஆஆஆச்சூ!
ஊஷ்ஷ்ஷ்ஷ்!
வாழைப்பழங்கள் பழக்காரனின்
கைகளிலிருந்து பறந்தன.
பச்சாக்!
வாழைப்பழங்கள் தபால்காரனின்
தலையில் விழுந்தன.
தபால்காரன்
ஒரு பசுவின் மேல் விழுந்தான்.
டமால்!
பசு வாலை உயர்த்திக்கொண்டு
ஓடியது.
பா-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ!
கஜபதி குலபதி வருத்தப்பட்டான்.
தன் நண்பர்களை
அவன் காயப்படுத்த
விரும்பவில்லை.
மன்னிப்பு கேட்பதற்காக
கஜபதி குலபதி
வாயைத் திறந்தான்.
"ஆஆஆஆ. . . . . . . . .ச்சூ!"
எவ்வளவு
வேகமாக ஓட முடியுமோ
அவ்வளவு வேகமாக
பழக்காரன் ஓடினான்.
தபால்காரனும்
அதே போல் ஓடினான்.
பசுவும் ஓடியது.
கஜபதி குலபதி
மிகவும் வருத்தப்பட்டான்.
தன் நண்பர்களை
அவன் காயப்படுத்த
விரும்பவில்லை.
அதனால், கஜபதி குலபதி
கோயில் சுவருக்குப் பின்னால்
ஒளிந்து கொண்டான்.
நாள் முழுவதும்
அவன் அங்கிருந்து நகரவில்லை.
கஜபதி குலபதிக்கு
சளி பிடித்த விஷயம்
எல்லோருக்கும் தெரிய வந்தது.
"கஜபதி குலபதிக்கு
சளி பிடிச்சிருக்கு!"
என்று பழக்காரன்
பால்காரனிடம் சொன்னான்.
"கஜபதி குலபதிக்கு
சளி பிடிச்சிருக்கு!"
என்று பால்காரன்
தையல்காரனிடம் சொன்னான்.
"கஜபதி குலபதிக்கு
சளி பிடிச்சிருக்கு!"
என்று தையல்காரன்
பூக்காரியிடம் சொன்னான்.
"கஜபதி குலபதிக்கு
சளி பிடிச்சிருக்கு!"
என்று பூக்காரி
தபால்காரனிடம் சொன்னாள்.
"கஜபதி குலபதிக்கு சளி பிடித்த
விஷயம் எனக்கு எப்பவோ
தெரியும்!"
என்று தபால்காரன்
கோபமாகச் சொன்னான்.
இரவில் ஒரு பெரிய
சத்தம் எல்லோரையும்
தூக்கத்திலிருந்து எழுப்பியது.
அது ஒரு நாயாக இருக்குமோ?
சத்தம் அதிகமாகியது...
சிங்கமாக இருக்குமோ?
சத்தம் இன்னும் அதிகமாகியது...
இடியாக இருக்குமோ?
சத்தம் மேலும் அதிகமாகியது...
வானமே கீழே
விழுந்து விட்டதோ?
ஆஆஆஆஆஆச்சூ!
யாரும் கேட்காத மிகப்பெரிய
தும்மல் அது.
கஜபதி குலபதியின்
தும்மல் தான் அது!
என்ன செய்வது
என்று தெரியாமல்
எல்லோரும் மறுபடியும்
தூங்கச் சென்றனர்.
அந்தத் தும்மலுடன்
கஜபதி குலபதியின் சளி
காணாமல் போனது.
காலையில்
மலர்ந்த முகத்துடன்
வெளியே வந்தான்.
தொட்டுத்தழுவியபடி எல்லோரும்
அவனை சுற்றி நின்றனர்.
அப்போது ஒரு
பாட்டியம்மா சொன்னார்,
"கஜபதி குலபதிக்கு
ஒரு வீடு கட்ட வேண்டும்.
அப்படிச் செய்தால்
அவன் மழையில்
நனைய வேண்டியது இல்லை."
அதன்படி பழக்காரன்,
பால்காரன், தையல்காரன்,
பூக்காரி,
மற்றும் தபால்காரன்
இவர்கள் சேர்ந்து
கஜபதி குலபதிக்கு
ஒரு பெரிய வீடு
கட்டிக்கொடுத்தார்கள்.
கஜபதி குலபதி
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
அந்நாளில் இருந்து
இந்நாள் வரை கேட்டதெல்லாம்
"ஆ-ஆச்சூ"
"ஆ-ஆ-ஆச்சூ"
"ஆ-ஆ-ஆ-ஆச்சூ"
"ஆ-ஆ-ஆ-ஆ-ஆச்சூ"
மட்டும் தான்
ஆனால் கேட்கவே கேட்காதது...
"ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆச்சு"
Story: Ashok Rajagopalan, Illustrations: Ashok Rajagopalan, Music Composed and Arranged by: Jerry Silvester Vincent, SFX Design, Mix and Mastered by: Jerry Silvester Vincent, Translation: Ashok Rajagopalan, Translation: Ashok Rajagopalan, Narration: Vijayakumar, Animation: BookBox
FREE Apps for iPads & iPhones: http://www.bookbox.com/ios
FREE Apps for Android phones & tablets: http://www.bookbox.com/android
Many more stories, languages & multiple subtitle options: http://www.bookbox.com #BookBox #BookBoxTamil #Learn2Read