Перейти к содержимому

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் தலா 3 கிலோ சின்ன வெங்காயம் பரிசு

JOTHI TRUST - ஜோதி அறக்கட்டளை , தஞ்சாவூர்

0:00 / 0:00

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் தலா 3 கிலோ சின்ன வெங்காயம் பரிசு

61 просмотр · 2 дн. назад
JOTHI TRUST - ஜோதி அறக்கட்டளை , தஞ்சாவூர்
2,87 тыс. подписчиков
61 просмотр · 2 дн. назад
தற்போது சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது. சமையலுக்கு அத்தியாவசியமான இந்த சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தஞ்சாவூர் போக்குவரத்து ஒழுங்குபிரிவு மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி தஞ்சை பழைய பஸ்நிலையம் அண்ணா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், அபராதம் விதிப்பதற்கு பதிலாக, விதியை மதித்து முறையாக ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர ஓட்டிகளை நிறுத்தி, தலா 3 கிலோ சின்ன வெங்காயத்தை கவுரவப் பரிசாக வழங்கி தஞ்சாவூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அசத்தினார். நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஒலிபெருக்கி மூலம் கவிதைகளைப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் ரூ.400 மதிப்பிலான 3 கிலோ சின்ன வெங்காயத்தை பரிசாகப் பெற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாருக்கும் ஜோதி அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர். அதேநேரம், ஹெல்மெட் அணியாமல் வந்து அபராதம் செலுத்திய வாகன ஓட்டிகள், "இனி கட்டாயம் ஹெல்மெட் அணிவோம்" என உறுதி ஏற்றுச் சென்றனர். இடம் : தஞ்சாவூர் தேதி : 05.10.2026 நன்றி : பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி